வாள்களை வீசி மக்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த இளைஞர்கள் யாழில்

ஆசிரியர் - Editor II
வாள்களை வீசி மக்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த இளைஞர்கள் யாழில்

யாழ்ப்பாணத்தில் மக்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த நான்கு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சங்கானையில் வாள்களால் மக்களை அச்சுறுத்தியதுடன், கொள்ளையில் ஈடுபட்டவர்களே இவ்வாறு தெல்லிப்பழை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

சங்கானை வைத்தியசாலைக்கும், தொட்டிலடிச் சந்திக்கும் இடையே நேற்று மாலை 5 மணியள வில் 2 மோட்டார் சைக்கிள்களில் பயணித்த ஐவர் மக்களை அச்சுறுத்தியுள்ளனர்.

வாள்களை வீசி, தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டனர். மக்கள் சிலர் அவர்களைப் ஒளிப்படம் எடுத்தபோது அவர்களைத் துரத்திச் சென்றனர்.

சங்கானை சிலம்புப்புளியடி ஆலயத்துக்கு அருகில் இருந்த வேலி, இளைஞர் மன்றக் கதவையும் சேதப்படுத்தினர். வீதியால் பயணித்த பெண் ஒருவரின் கழுத்தில் கத்தி வாள் வைத்து அவரின் சங்கிலியை அறுத்துச் சென்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் யாழ். தெல்லிப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த குணரட்ண தலைமையிலான குழுவினர் நேற்றிரவு மேற்கொண்ட சுற்றிவளைப்பில் மேற்படி குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்

ஏழு பேர் அடங்கிய குறித்த கும்பலில் நான்கு பேர் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதுடன் அவர்களிடமிருந்து கூரிய கத்திகள் மற்றும் இரும்புக்கம்பிகள் கேடயங்கள் என்பனவற்றுடன் இலக்கத்தகடுகள் மாற்றப்பட்ட நான்கு

மோட்டார் சைக்கிள்களும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது

கைது செய்யப்பட்டவர்கள் காரைநகர், மானிப்பாய், சண்டிலிப்பாய், அளவெட்டி பகுதிகளைச் சேர்ந்த 19 தொடக்கம் 22 வயதுடைய இளைஞர்கள் ஆவார்கள்.

இந்த நான்கு சந்தேகநபர்களையும் மேலதிக விசாரணையின் பின்னர் இன்று யாழ் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவதுடன் ஏனையவர்களையும் கைது செய்ய தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெல்லிப்பளை பொலிசார் தெரிவித்தன

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு