SuperTopAds

நற்பிட்டிமுனையில் இலவச மருத்துவ முகாம் (photoes)

ஆசிரியர் - Editor III
நற்பிட்டிமுனையில் இலவச மருத்துவ முகாம் (photoes)

நற்பிட்டிமுனையில் இலவச மருத்துவ முகாம் 

நற்பிட்டிமுனை சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றிய சுகாதார பிரிவு ஏற்பாடு செய்த இலவச மருத்துவ முகாம் நற்பிட்டிமுனை அல்-அக்ஸா  மத்திய மகா வித்தியாலய அஹமட் மண்டப கேட்போர் கூடத்தில்  ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றது.

 நற்பிட்டிமுனை சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றியத்தின் (NASSDO)  தலைவர் ஐ.எல்.ஏ.குத்தூஸ் தலைமையில் நடைபெற்ற  இலவச மருத்துவ முகாமில் தொற்றா நோய்களான நீரிழிவு, புற்றுநோய் மாரடைப்பு, உயர் குருதியமுக்கம் போன்ற நோய்களுக்கான பரிசோதனைகள் இடம்பெற்றன. இன்று எமது சமூகத்தில் தொற்றா நோய்களான நீரிழிவு, புற்றுநோய் மாரடைப்பு, உயர் குருதியமுக்கம் போன்றன இளம் வயதிலேயே பொதுமக்களை கொல்லும் நோய்களாக காணப்படுகின்றன. ஆகவே ஆரம்பத்திலேயே இந்நோய்களை கண்டுபிடிப்பதன் மூலமாக இந்த நோய்களின் அகோர தன்மையை சமூகத்தில் களையக் கூடியதாக இருக்கும்.

அதன் அடிப்படையில் இதன் போது இலவச மருத்துவ முகாமில் இரத்தத்தில் சீனி (FBS), இரத்த அழுத்த (BP)பரிசோதனை,உடல் நிறை குறியீட்டெண் (BMI) மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன்  வைத்திய அதிகாரிகளான டாக்டர் எஸ்.அஜ்மல் இம்தியாஸ், டாக்டர் எம்.ஏ.பயாஸ், சுகாதாரப் பிரிவின்  பொது சுகாதார பரிசோதகர் எம்.நிஜாமுதின் அத்துடன் குடும்ப சுகாதார உத்தியகத்தர்களான ரி.எஸ்.சாஹிரா எஸ்.ஜீவானந்தி ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது 

இலவச மருத்துவ முகாமில் பிரதேசத்திலுள்ள பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.