மேன்முறையீட்டு நீதிமன்ற தீா்ப்பின்படி அமைச்சரான டெனீஸ்வரனுக்கு முன் வாிசை ஆசனம் வழங்கப்படாமை எதற்காக? அவையில் சா்ச்சை..

ஆசிரியர் - Editor I
மேன்முறையீட்டு நீதிமன்ற தீா்ப்பின்படி அமைச்சரான டெனீஸ்வரனுக்கு முன் வாிசை ஆசனம் வழங்கப்படாமை எதற்காக? அவையில் சா்ச்சை..

அமைச்சர் பா.டெனீஸ்வரன் தனது அமைச்சர் பதவியை தொடர்வதற்கு இடமளிக்கப்படவேண் டும் எனவும், அவருக்கு அமைச்சர்களுக்கான ஆசனம் ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் எனவு ம் ஆழுங்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் கடுமையான தர்க்கம் மூண்டது. 

வடமாகாணசபையின் 126வது அமர்வு நேற்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இன்று நடைபெற்றிருந்தது. இதன்போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை சபைக்கு கொண் டுவந்த மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன், 

மேன்முறையீட்டு நீதிமன்றம் மாகாண மீன்பிடி, போக்குவரத்து மற்றும் கிராம அபிவிருத்தி, வர்த்தக வாணிப அமைச்சராக பா.டெனீஸ்வரனே தொடர்ந்தும் இருப்பார் எனவும், அதற்கு எவரும் தடைவிதிக்க கூடாது. எனவும் கூறியதுடன், 

அரசிய லமைப்பின் படி இறமை மக்களுக்குரியது. அந்த இறமையை மக்கள் நம்பிக்கை பொறுப்பாக எங்களிடம் கொடுத்துள்ளார்கள். ஆகவே நாம் நம்பிக்கை பொறுப்பாளிகள். அந்தவகையில் மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவு பிரகாரம் டெனீஸ்வரன் 

அமைச்சராக தொடர்வதற்கு  இடமளிக்காமை மக்களின் இறமையை மலினப்படுத்தும் ஒரு செயலாகும். மேலும் மக்களுடைய நம்பிக்கை பொறுப்பாளிகளான நாம் ஆளுநரை சுயாதீனமாக செயற்படுவதற்காக இடமளிக்கப் போகிறோமா? 

ஆகவே இந்த விடயத்திற்கு பரிகாரம் காணாமல் நாம் இந்த சபையில் குந்தியி ருப்பதனால் பயன் எதுவும் இருக்காது. அமைச்சர் டெனீஸ்வரன் அமைச்சராக தொடர்ந்து  இயங்குவதற்கு இடமளிக்கப்பட்டு அவருக்கு ஆசனம் வழங்கப்படவேண்டும். 

இல்லையேல் அ து நீதிமன்ற தீர்ப்பு குறித்து பாராமுகமாக இருப்பதாக அர்த்தப்படும் என்றார். இதனை தொடர் ந்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன், அமைச்சர் பா.டெனீஸ்வரனின் பதவி நீக்கம் தொடர்பாக ஆளுநர் வர்த்தமானி பிரசுரம் 

வெளியிடாமையினால் டெனீஸ்வரன் தொடர்ந்தும் பதவி வகிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. முதலமைச்சராக நான் எனது கட மையை சரியாக செய்துள்ளேன். வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவது எனது கடமையல்ல. 

அதே சமயம் 5 அமைச்சர்களுக்கு மேல் பதவி வகிப்பது அரசியலமைப்புக்கு முரணான ஒன்ற hகும். அவ்வாறு இருந்தால் அமைச்சர் சபையின் தீர்மானங்கள் சட்ட வலு அற்றவையாக மாறுவதுடன், பாரிய விளைவுகளையும் அது உண்டாக்கும். 

ஆகவே அரசியலமைப்புக்கு முரணாக நடப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை. இவ்வாறான நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்பினை எதிர்பார்த்து காத்திருக்கவேண்டியுள்ளது. மேலும் தற்போதுள்ள அமைச்சர்கள் எவரை யும் பதவி இறக்கம் செய்ய இயலாது. 

மேலும் அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளதென்றால் அதிகார பகிர்வு என்னாயிற்று? ஆளுநருடைய சர்வாதிகாரத்தையா எம் மவர்கள் எதிர்பார்க்கிறார்கள்? ஆகவே ஒரு சில நாட்களில் உச்ச நீதிமன்றம் ஒரு சில நாட்களில் ஒரு தீர்மானத்தை எடுக்கும் 

என்றார். தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன் கருத்து கூறுகையில், ஒரு ஓய்வு பெற்ற நீதியரசராக முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனின் பதில் வியப்பையும், ஏமாற்றத்தையும் தருகிறது. வழக்கில் யார் வெல்லவேண்டும்? யார் தோற்கவேண்டும்? 

என்பது எங்களுடைய பிரச்சினை அல்ல. முன்னாள் அமைச்சர்களை பதவி விலகு ம்படி முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கேட்டதைபோல் அமைச்சர் டெனீஸ்வரனின் அமைச் சு துறைகளை வகிக்கும் அமைச்சர்களான க.சிவநேசன், திருமதி அனந்தி சசிதரன் மற்றும்

முதலமைச்சர் ஆகியோர் அவற்றை மீளவும் டெனீஸ்வரனிடம் கொடுப்பதுடன் அமைச்சர்கள் இருவரின் ஒருவர் தமது அமைச்சு பொறுப்பை மீள வழங்கவேண்டும். மக்களால் தேர்வு செய்ய ப்பட்ட சபை உள்ளபோது ஆளுநர் சுயமாக செயற்படுவதற்கு 

இடமளிக்கப்பட கூடாது. இந்த விடயத்தை இந்த சபை மிக மேலான விடயமாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்றார். தொடர்ந்து கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அமைச்சர் பா.டெனீஸ்வரனின் செயற்பாடு கட்சிரீதியானது அல்ல. 

அவருடைய தனிப்பட்ட செயற்பாடாகும். என கூறினார். இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன் ஆளுநர் மாகாண அமைச்சர்கள் 4 பேரும் யார்? என உறுதிப்படுத்துமாறு முதலமைச்சர் சீ.விவிக்னேஷ்வரனிடம் கேட்டுள்ளார். 

என கூறினார். ஆனால் அதனை மறுத்த முதலமைச்சர் அவ்வாறு எதுவும் தன்னிடம் கேட்கப்படவில்லை என்றார். தொடர்ந்து பேசிய மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரனுக்கு முன் வரிசை ஆசனம் தேவையாக இருந்தால் 

எனது ஆசனத்தை தருகிறேன். அவருக்கு கொடுங்கள் என கூறினார். இதற்கு பதிலளித்த மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன் தனிப்பட்ட ஒருவருக்கு இழுக்கை ஏற்ப டுத்தும் வகையில் சிவாஜிலிங்கம் பேசுவதாக கூறினார். 

தொடர்ந்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் கருத்து கூறுகையில், ஆசனத்திற்கு ஆசைப்ப ட்டவன் நான் அல்ல என கூறினார். தொட ர்ந்து அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறுகையில், இங்கு நடைபெற்ற விடயங்களை நான் நிச்சயமாக 

ஆளுநருடைய கவனத்திற்கு கொண்டு செல்வேன். மேலும் தானே தொடர்ந்து ம் அமைச்சராக இருப்பதாகவும், தனக்கு அமைச்சர்களுக்குரிய ஆசனம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். எனவும் எனக்கு கடிதம் எழுதியுள்ளார். 

இதனையடுத்து இந்த விடயம் தொடர்பாக தெளிவு படுத்தும் படியும், நாம் இருட்டு நிலையில் இருக்கிறோம். என்பதையும் ஆளுநருக்குக்கடிதத்தில் எழுதியுள்ளேன். அதற்கான பதில் எமக்கு கிடைக்கவில்லை. 

மேலும் உத்தியோக பூர்வமாக இந்த விடயம் தொடர்பில் எமக்கு எதுவும் தெரியப்படுத்தப் படவில்லை. ஆகவே நாம் நீதிமன்ற உத்தரவை மீறுவதாகவோ, மறுதலிப்பதாகவே அர்த்த ப்படாது. 

என கூறியதுடன் ஆளுநரின் பதிலை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக கூறி அவையை தேரீர் இடைவேளைக்காக ஒத்திவைத்தார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு