பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடந்த மோதல் கத்திக் குத்தில் முடிந்தது! 16 வயது மாணவன் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடந்த மோதல் கத்திக் குத்தில் முடிந்தது! 16 வயது மாணவன் படுகாயம்..

இரு மாணவர்களுக்கு இடையில் ஏற்பாட்ட தகராறில் கத்திக்குத்துக்கு இலக்கான மாணவர் ஒருவர் காயமடைந்த நிலையில் கண்டி பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றிற்கு முன்பாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

16 வயதுடைய பாடசாலை மாணவனே காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகராறுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையெனத் தெரிவிக்கும் பொலிஸாார், 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு