மக்களுக்கு பயன்படும் இடத்தில் பொதுசந்தை அமைப்படாமையினால் பல மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கடைகள் பயன்பாடற்ற நிலையில்..

கிளிநொச்சி பூநகரிப்பிரதேசத்திற்கான பொதுச்சந்தை பேருந்து நிலையம் என்பன உரிய இடத்தில் உரிய முறையில் அமைக்கப்படாததனால் இன்று பல மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட கடைகளும் பேருந்துநிலையமும் பயன்பாடற்ற கட்டடங்களாக காணப்படுகின்றன.
கிளிநொச்சி பூநகரிப்பிரதேசத்தில் மீள்குடியேற்றத்தின் பின்னர் நெல்சீப் திட்டத்தின் கீழ் 18.7 மில்லியன் ரூபாசெலவில் நிர்மானிக்ப்பட்ட பொதுச்சந்தை வளாகத்;தில் 25 இற்கும மேற்பட்டகடைகள் மூடப்பட்டநிலையில் பேருந்து நிலையம் பயன்படுத்தப்படாத நிலையிலும் காணப்படுவதனால்
இங்கே வர்த்தக நடவடிக்கைகள் ஈடுபட்;டு வருகின்ற ஏழு வரையான வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். யுத்தகாலத்திற்கு முன்னர் பூநகரிப் பிரதேசத்திற்கான பொதுச்சந்தை பேருந்து நிலையம் என்பன பூநகரி வாடியடிசந்தியில் காணப்பட்டன.
மீள்குடியேற்றத்தின் பின்னர் அப்போது இருந்த அபிவிருத்திக்குழுவின் திடடமிடாத செயற்பாட்டினால் இவ்வாறு பெருந்தொகை நிதியில் பொருத்தமற்ற இடமொன்றில்
பூநகரி பொதுச்சந்தையும் பேருந்து நிலையமும் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்காக அப்போதைய ஒருங்கிணைப்புக் குழு தலைவரினால திறந்;து வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு திட்டமிடப்படாத 18.7 மில்லியன்ரூபா செலவில் அமைக்கப்பட்ட இச்சந்தைக்கட்டிடத்தில் அமைக்கப்பட்ட 25இற்கும் மேற்பட்ட கடைகள் இன்றும் திறக்கப்படாத கடைகளாகவே காணப்படுகின்றன.
இதில் ஏனைய திறக்கப்பட்டுள்ள ஏனைய ஏழு கடைகளில் குறிபபிட்ட சில கடைகள் தவிர, பொருத்தமற்ற வியாபார நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்டிக்கின்றது. மர அரிவு நிலையம் ஒன்றிற்கும் இதில் கடை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை இங்கே காணப்படுகின்ற பேருந்து நிலையத்தில் பேருந்துகள் தரித்துச்செல்லாத நிலையும் பேருந்துகளுக்காக பயணிகள் காத்திருக்காத நிலையும் காணப்படுகின்றது.
இவ்வாறு பேருந்து சேவைகளுக்காக காத்திருக்;கும மக்கள் வாடியடிச்சந்தியில் தரித்து நிற்கின்றனர். பொருத்தமற்ற இடமொன்றில் திட்டமிடப்படாது மக்களின் கருத்துக்கள் அறியப்படாது பெருந்தொகை நிதியில் மேறகொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைகள் இன்று பயன்பாடற்றதொன்றான
வேலையாக காணப்படுவதாகவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தற்போது குறித்த சந்தையை பூநகரி வாடியடிக்கு மாற்றுக்குவது தொடர்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.