SuperTopAds

கல்கி 2898 AD: பல கோடியில் ப்ரமோஷன்.. ​புஜ்ஜி ரோபோவை அறிமுகப்படுத்தி பிரபாஸ்!

ஆசிரியர் - Admin
கல்கி 2898 AD: பல கோடியில் ப்ரமோஷன்.. ​புஜ்ஜி ரோபோவை அறிமுகப்படுத்தி பிரபாஸ்!

பிரபாஸ் நடிப்பில் உருவாகி உள்ள 'கல்கி 2898 AD' இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக உள்ளது. படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில் படம் குறித்த அடுத்தடுத்த அதிரடியான அறிவிப்புகள் வெளிவந்துக்கொண்டு இருக்கிறது. 

நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் ​​பிரபாஸ் புஜ்ஜி என்ற புதிய கதாபாத்திரத்தை அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார்.

தெலுங்கில் மகாநடி உள்ளிட்ட படங்களை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் கல்கி 2898 ஏடி. இப்படத்தில் தீபிகா படுகோன், அமிதாப்பச்சன், ராணா, துல்கர் சல்மான், திஷா பதானி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.

அதிக பொருட்செலவில் சயின்ஸ் பிக்ஷன் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள கல்கி திரைப்படம் சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.