ஹீரோவாக உயர்ந்துவிட்டேன் என செல்லாமல் சொல்லும் சூரி... கருடன் - விமர்சனம்..

ஆசிரியர் - Editor I
ஹீரோவாக உயர்ந்துவிட்டேன் என செல்லாமல் சொல்லும் சூரி... கருடன் - விமர்சனம்..

தயாரிப்பு : லார்க் ஸ்டுடியோஸ்

நடிகர்கள் : சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், ரேவதி சர்மா, சமுத்திரக்கனி, மைம் கோபி, வடிவுக்கரசி மற்றும் பலர்.

இயக்கம் : ஆர். எஸ். துரை செந்தில்குமார்

மதிப்பீடு : 3/5

சென்னை மாநகரத்தில் இந்திய மதிப்பில் 300 கோடி ரூபாய்க்கு அதிகமான மதிப்புள்ள அனாமத்தான (எங்கோ தமிழகத்தின் ஏதோ ஒரு பகுதியில் உள்ள ஆலயத்திற்கு தானமாக வழங்கப்பட்ட நிலம்) நிலம் ஒன்று இருப்பதை அமைச்சராக இருக்கும் ஆர்வி உதயகுமார் கும்பலுக்கு தெரிய வருகிறது. 

அத்துடன் இதற்கான தாமிர பட்டயம் ஒன்று தமிழகத்தின் தென் பகுதியில் உள்ள ஆலயத்திற்கு சொந்தமான வங்கி பெட்டகத்தில் இருக்கிறது. ஆலயத்திற்கு சொந்தமான அந்தப் பெட்டகத்தின் சாவி ஆலய தர்மகர்த்தாவாக திகழும் வடிவுக்கரசியிடம் இருக்கிறது. 

இதனை வடிவுக்கரசியிடமிருந்து கைப்பற்ற அமைச்சர் உதயகுமார் தன் உறவினரான மைம் கோபியையும், காவல் அதிகாரியான சமுத்திரக்கனியையும் களம் இறக்குகிறார். இவர்கள் அந்த ஆலயம் அமைந்துள்ள பகுதிக்கு வருகை தருகிறார்கள். அந்த ஆலயத்தை சசிகுமார் - உன்னி முகுந்தன் - சூரி ஆகிய மூவரணி பாதுகாப்பு அரணாக உள்ளனர். 

இவர்களைக் கடந்து அமைச்சர் கும்பல் அந்த ஆலயத்தில் பெட்டகத்தில் உள்ள தாமிர பட்டயத்தை கைப்பற்றியதா? இல்லையா? என்பதும், அதற்காக நடைபெற்ற போராட்டங்களை விவரிப்பதும் தான் 'கருடன்' படத்தின் கதை.ஆதி எனும் கதாபாத்திரத்தில் சசிகுமார் கதையின் நாயகனாகவும், 

கதையை வழிநடத்திச் செல்லும் மாலுமியாகவும் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மனதில் எளிதாக இடம் பிடிக்கிறார்.கர்ணா எனும் கதாபாத்திரத்தில் உன்னி முகுந்தன் சசிக்குமாருக்கு நண்பனாகவும், சொக்கன் எனும் சூரிக்கு முதலாளியாகவும் அற்புதமாக நடித்திருக்கிறார்.

உறவில்லாத தனிக்கட்டையான சொற்கள் எனும் கதாபாத்திரத்தில் சூரி கதையின் நாயகனாக கதையை வழிநடத்திச் செல்லும் சசிகுமாருக்கு தோள் கொடுக்கும் தோழனாக அவருடைய குடும்பத்தை காக்கும் அரனாக அற்புதமாக நடித்து ரசிகர்களின் மனதில் நான் ஒரு எக்சன் ஹீரோவாக உயர்ந்து விட்டேன் என்பதை சொல்லாமல் சொல்வதுடன் அதற்காக என்னை தயார் படுத்திக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லி இருப்பதை ரசிகர்கள் கைத்தட்டி உற்சாகமாக வரவேற்கிறார்கள்.

விசுவாசமாக இருப்பது தான் சொக்கன் கதாபாத்திரத்தின் குணாதிசயம். ஆனால் யாருக்காக விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதனை சொக்கனின் வாழ்வில் நடைபெறும் சம்பவங்களை வைத்து திரைக்கதையை அமைத்து சூரியன் கதாபாத்திரத்தை நாயக பிம்பத்திற்கு உயர்த்தி இருக்கும் திரைக்கதை ஆசிரியரின் உத்தி பாராட்டத்தக்கது.

தமிழ் சினிமாவின் வழக்கமான கமர்சியல் அம்சங்களான நட்பு , நட்புக்குள் துரோகம், விசுவாசம், பழிக்குப் பழி... அனைத்தும் தவறாமல் அச்சு பிசகாமல் இந்தப் படத்திலும் இருக்கிறது. 

இதில் சூரி முதன்முறையாக சசிகுமார் உன்னி முகுந்தன் ஆகிய இருவரையும் கடந்து மாஸான காட்சிகளில் மாஸாக அமைக்கப்பட்டிருக்கும் சண்டை காட்சிகளில் கடினமாக உழைத்து ரசிகர்களை பரவசப்படுத்துகிறார்.

வெற்றி மாறனின் கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் இயக்குநர் துரை செந்தில்குமார்... சூரியிடமிருந்து ரசிகர்கள் எதை எதிர்பார்ப்பார்கள் என்பதை துல்லியமாக அவதானித்து அதனை நேர்த்தியாக வழங்கி இருக்கிறார் அதனால் கருடன் சூரி படம் என்று உறுதியாக சொல்லலாம். 

அதிலும் படத்தின் கதையை மண், பெண், பொன் என மனிதர்களுக்கு இருக்கும் அடிப்படையான ஆசைகளை பட்டியலிட்டு, அதற்கேறாற்போல் திரைக்கதையை அமைத்து இயக்கியிருப்பது கூடுதல் வலிமையைச் சேர்த்திருக்கிறது. சூரியின் காதலியாக நடித்திருக்கும் ரேவதி சர்மா முகத்தில் அழகையும்,

இளமையும் தேக்கி வைத்து தனித்துவமான திரை தோன்றல் மற்றும் நடிப்பால் இளம் ரசிகர்களை மனதில் காதலை உண்டாக்குகிறார். முதல் பகுதியை விட இரண்டாம் பகுதியில் விறுவிறுப்பு இருக்கிறது. அதிலும் இரண்டாம் பாதியில் சூரி பேசும் 'நாயப்போல இருந்தேன். 

என்ன மனுசனா மாத்திட்டீங்க..' வசனம் பாராட்டைப் பெறுகிறது.பாடல்களை விட பின்னணி இசையில் யுவன் சங்கர் ராஜாவின் திறமை ப்ளீச் 'விடுதலை' படத்திற்குப் பிறகு வெற்றிமாறன் அமைத்துக் கொடுத்த பாதையில் பயணிக்கிறேன்' என்று தெரிவித்திருக்கும் சூரி அதனை 'கருடன்' படத்தில் அடி பிசகாமல் பயணித்திருப்பதால் ரசிகர்களிடம் கரவொலி அதிகமாகி இருக்கிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு