ரி20 உலகக் கிண்ணப் போட்டியை முன்னிட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது!

ஆசிரியர் - Editor I
ரி20 உலகக் கிண்ணப் போட்டியை முன்னிட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது!

உலகக் கிண்ணப் போட்டியின்போது அச்சுறுத்தல் இருப்பதாக அறிக்கைகள் வெளியானதை அடுத்து ரி20 உலகக் கிண்ண போட்டிக்கான பாதுகாப்பு அதிரிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் நடைபெறவுள்ள டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்துக்கான பாதுகாப்பை அமெரிக்கா அதிகரிக்கும் என்று நியூயோர்க் ஆளுநர் கவர்னர் தெரிவித்துள்ளார்.

'உலகக் கிண்ணப் போட்டிக்கான ஏற்பாடுகளின் ஓர் அங்கமாக பார்வையாளர்களின் உயிர்பாதுகாப்பை கருத்தில் கொண்டு சமஷ்டி மற்றும் உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் எனது அணி இணைந்து பணியாற்றி வருகிறது. 

இப்போதைக்கு நம்பத்தக்க அச்சுறுத்தல் எதுவும் இல்லை' என ஆளுநர் கத்தி ஹோச்சுல் குறிப்பிட்டுள்ளார்.நியூ யோர்க் சிட்டியில் நடைபெறும் உலகக் கிண்ண சுற்றுப் போட்டி 

மற்றும் அதனுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகளை சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி தீவிரவாதிகள் வன்முறைகளில் ஈடுபடலாம் அல்லது இடையூறுகளை ஏற்படுத்தலாம் என நியூ யோர்க் சிட்டி பொலிஸாரை மேற்கோள் காட்டி ஏபிசி நீயூஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

'இந்த உலகக் கிண்ணத்தின்போது போது குறிப்பாக இந்தியா-பாகிஸ்தான் போட்டியைக் குறிப்பிட்டு ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாக வெளியான தகவல்கள் கவலையைத் தருகிறது. 

இதன் காரணமாக பாதுகாப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளை பாதுகாப்பு தரப்பினர் பலப்படுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது' என அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் - கே-உடன் தொடர்புடைய அச்சுறுத்தல் ஒன்று கடந்த ஏப்ரலில் விடுக்கப்பட்டதாகவும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி குறித்து அச்சுறுத்தல்கள் வந்ததாகவும் நசாவ் கவுன்டி போலிஸ் ஆணையாளர் பெட்றிக் ரைடர் கூறினார்.

பதட்டமான அரசியல் சூழ்நிலைகளால் பல ஆண்டுகளாக இருதரப்பு தொடர்களில் விளையாடாமல் இருந்துவரும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் உலகக் கிண்ணத்தில் மோதும் போது அப் போட்டியை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பெருமளவில் தொலைக்காட்சிகள் வாயிலாக பார்வையிடுகின்றனர்.

போட்டியின்போது பாதுகாப்பு தரப்பினரின் பிரன்னம், கண்காணிப்பு மற்றும் ஸ்கிரீனிங் சோதனை ஆகியவற்றை அதிகாரிக்குமாறு நியூயோர்க் மாநில பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

என ஹோச்சுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நியூயோர்க் நசவ் விளையாட்டரங்கில் ஜூன் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு