மும்பை போனதும் பச்சோந்தியாக மாறிய சூர்யா!

ஆசிரியர் - Admin
மும்பை போனதும் பச்சோந்தியாக மாறிய சூர்யா!

பொதுவாக ஒவ்வொருவரும் இடம் பொருள் ஏவல் தெரிந்து அதற்கேற்ற மாதிரி நடந்து கொள்வார்கள். ஆனால் நல்லவர் போல் ஒரு முகத்திரையை போட்டு அதன் பின்பு அது பொய் முகத்தை காட்டும் பிம்பம் போல் செயல் படுவது பச்சோந்தி. ஏனென்றால் இதுதான் சூழ்நிலைக்கேற்ப நிறத்தையும் குணத்தையும் மாற்றிக் கொள்ளும். அதுபோலத்தான் நடிகர் சூர்யா மாறிக்கொண்டு வருகிறார் என்று வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார்.     

அதாவது நல்ல கருத்துக்களை மனசுல பட்டதை எந்தவித பயமும் இல்லாமல் தட்டிக் கேட்டு நிஜ ஹீரோ போல சில சமயங்களில் சூர்யா கொந்தளித்திருக்கிறார். ஆனால் அதே தப்பு மறுபடியும் நடக்கும் போது எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லாதது போல் ஒதுங்கி இருக்கிறார்.

உதாரணத்திற்கு நீட் தேர்வு விவாகரத்தில் அதிமுக ஆட்சியில் இருந்த பொழுது தேர்வின் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட போது சூர்யா அவருடைய கருத்துக்களை கூறி ரொம்பவே ஆக்ரோஷமாக பொங்கி எழுந்தார். அத்துடன் அடிக்கடி கருத்துக்களை சொல்லி விமர்சனங்களை புட்டு புட்டு வைத்து அதிமுக ஆட்சிக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.

ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தபோது நீட் தேர்வு பிரச்சினையால் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து இருக்கிறார்கள். இதை சூர்யா வேற விதமாக திசை திருப்பி பேசி அடக்கி வாசித்து மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடி விட்டார் என்றே சொல்லலாம்.

அதாவது ஒரு தேர்வு நம்முடைய வாழ்க்கையை தீர்மானிக்காது. நம்பிக்கையும் தன்னம்பிக்கையுடனும் இருக்க வேண்டும் எந்த ஒரு கவலையாக இருந்தாலும் சில காலத்துக்குப் பிறகு எல்லாம் மறைந்துவிடும் என்று பேசி இருக்கிறார். அப்போது கட்சியை குற்றம் சாட்டிய சூர்யா தற்போது மாணவர்களின் பலவீனத்தை சுட்டிக்காட்டும் விதமாக பேசிவிட்டார்.

காரணம் திமுக ஆட்சியில் இருக்கும் பொழுது எதுவும் பேசக்கூடாது என்பதற்காக அடக்கி வாசிக்கிறார். சூர்யாவை பொருத்தவரை அதிமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் பொங்கனும். திமுக ஆட்சிக்கு வந்து விட்டால் அடக்கி வாசிக்கணும் என்ற பாலிசி படி இருக்கிறார். அதனால் இப்பொழுது இங்கே இவருடைய பேச்சு பலிக்காது என்று தெரிந்த நிலையில் தற்போது மும்பைக்கு ஓடிப்போய் ஒளிந்து விட்டார்.

அது மட்டுமில்லாமல் ஹிந்தி வேண்டாம். தமிழை விட எந்த மொழியும் தலைசிறந்தது இல்லை. ஹிந்தியை புறக்கணிப்போம் என்று வாய்க்கு வாய் பேசிய சூர்யா தற்போது மும்பையில் செட்டில் ஆகும்படி மனைவி மக்களுடன் சொந்த வீட்டை வாங்கி தஞ்சம் அடைந்து விட்டார்.

நிமிஷத்துக்கு நிமிஷம் பேச்சை மாற்றிக் கொண்டு செயல்களில் உறுதியாக இல்லாத சூர்யா அடிக்கடி குணத்தை பச்சோந்தி போல் மாற்றிக் கொள்கிறார். என்று இவரை பற்றி ஏகப்பட்ட விமர்சனங்களை வலைப்பேச்சு விமர்சகர் அந்தணன் கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு