அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பினால் வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு
அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பினால் வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு
பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் அவர்கள் சமூகத்தில் சிறந்த மனிதர்களாகவும் தலைமைத்துவம் கொண்டவர்களாகவும் உருவாக்கும் ஒரு அங்கமாக அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் இன்று(14) கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பத்தை சேர்ந்தோருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
கல்முனை பிரதேச செயல நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பளீல் நெறிப்படுத்தலில் கல்முனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மருதமுனை நற்பிட்டிமுனை கல்முனைக்குடி ஆகிய கிராம பிரிவுகளைச் சேர்ந்த 8 பெண் குடும்பங்களுக்கு ரூபா 2 இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிக்கான காசோலைகள் வழங்கப்பட்டது.
குறித்த வாழ்வாதார உதவிக்கான காசோலைகள் இனிப்பு பண்டம் தயாரித்தல் ,கதவு யன்னல் அலங்கார சீலைகள் தயாரித்தல், கருவாடு பதனிடல் ,இரவு உணவு தயாரித்தல், தையல் மற்றும் தோற் பை, புத்தக பை தயாரித்தல் , உள்ளிட்டவைக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு இணைப்பாளர் கலைவாணி தயாபரன், நிருவாக கிராம உத்தியோகத்தர் உபுல் குமார, மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.ஜெனிதா பிரதீபன் , சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் , பெண்கள் சிறுவர்கள் சார்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,உள்ளிட்ட வலையமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.