மக்கள் நடமாட்டம் பகல் குறைவு -அம்பாறை மாவட்டத்தில் வெப்பம் அதிகரிப்பின் எதிரொலி

ஆசிரியர் - Editor III
மக்கள் நடமாட்டம் பகல் குறைவு -அம்பாறை மாவட்டத்தில் வெப்பம் அதிகரிப்பின் எதிரொலி

மக்கள் நடமாட்டம் பகல்  குறைவு -அம்பாறை மாவட்டத்தில் வெப்பம் அதிகரிப்பின் எதிரொலி


கடும் ஊஷ்ணம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்களின் நடமாட்டம் பகல் வேளையில் குறைவடைந்துள்ளதுடன் இரவு வேளை அதிகரித்து காணப்படுகின்றது.

அடிக்கடி ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் சீரற்ற   இயல்பு நிலையுடன்  பொதுமக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்படுகின்றது.அம்பாறை  மாவட்டத்தின் கல்முனை,  சவளக்கடை, சம்மாந்துறை,மத்தியமுகாம்,  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில்  உணவகங்கள், புடவைக்கடைகள்,வீதியோர வியாபாரங்கள் போன்றவைகள் வழமை போன்று இயங்கிய போதிலும்  மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்படுகிறது.

மேலும் அரச தனியார் போக்குவரத்து  குறிப்பிட்ட தூரத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையிலும் மட்டுப்படுத்த மட்டில் இடம்பெற்றது.அதில் பயணம் செய்கின்ற பொதுமக்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதை அவதானிக்க முடிகிறது.இது தவிர அரச தனியார் வங்கிகள் திறந்துள்ளதுடன் மக்கள் வருகை குறைந்தளவில் காணப்படுவதடன் சில இடங்களில்  ஆர்வத்துடன் பொருட்கொள்வனவில் ஈடுபட்டனர்.

கடந்த தினங்களுக்கு முன்னர் இம்மாவட்டத்தில்   மழை  திடிரென பெய்ததுடன் அதிகளவிலான பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வந்தததை அவதானிக்க முடிந்தது.  சவளக்கடை மத்தியமுகாம் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளின் வான்கதவுகள் தற்போது திறக்கப் பட்டுள்ளதால் அதிகளவான நீர் வாய்க்கால் ஊடாக வெளியேறுகின்றது.இவ்வாறு வெளியேறும் நீரில அதிகளவான மக்கள் வெப்பத்தை தணிப்பதற்கு குடும்பம் குடும்பமாக சுற்றுலா சென்று நீராடுகின்றனர்.

மேலும் பிரதேச செயலகங்கள் நீதிமன்றங்கள் வங்கிகள் பாடசாலைகளில் பரீட்சை நிலையங்கள் பிரத்தியேக வகுப்புகள் உள்ளிட்ட அரச தனியார் நிறுவனங்கள்  வழமை போன்று இயங்குகிறது. எனினும் கடும் வெப்பம் காரணமாக மக்கள் பகல் நேரத்தில் வெளியில் நடமாடுவதை தவிர்ப்பதுடன் இரவு வேளையில் அதிகளவில் நடமாடி வருகின்றனர்.அத்துடன் பெரிய நீலாவணை, ஓந்தாச்சிமடம், காரைதீவு ,சாய்ந்தமருது, மாளிகைக்காடு,  நிந்தவூர்,அட்டப்பளம், சம்மாந்துறை மாவடிப்பள்ளி ,சவளக்கடை, மத்தியமுகாம்,உள்ளிட்ட   முக்கிய இடங்களில் பிரதேசங்களில் மக்களின் நடமாட்டம் குறைவாக காணப்பட்டன.

அத்தோடு பொதுமக்கள் ஒன்றுகூடும் சில இடங்களில் முப்படையினர்  பொலிஸார்  பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.எனினும் கல்முனை பொது சந்தை  உட்பட அதனை சூழ உள்ள  பாதையோரங்களில்  மரக்கறி வியாபாரம் களைகட்டி காணப்பட்டது.  மேலும்   வியாபார நிலையங்கள் சுப்பர் மார்க்கெட்டுகள் பாமசிகள்   எரிபொருள் நிலையங்கள் வழமை போன்று திறக்கப்பட்டாலும் மக்கள் ஆர்வத்தடன் பொருட் கொள்வனவில் ஈடுபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

 எனினும் சில இடங்களில்  பொதுமக்களின் வருகை இன்மையால் வியாபார நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு