கணவருக்கு தேநீரில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துவிட்டு காதலனுடன் உல்லாசம்! கைது செய்யப்பட்ட மனைவி விளக்கமறியலில்..

ஆசிரியர் - Editor I
கணவருக்கு தேநீரில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துவிட்டு காதலனுடன் உல்லாசம்! கைது செய்யப்பட்ட மனைவி விளக்கமறியலில்..

கணவருக்குத் தூக்க மாத்திரை கொடுத்து தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபரை வீட்டுக்கு அழைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட மனைவியை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹட்டன் மாவட்ட மற்றும் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

26 வயது பெண்ணொருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபரான பெண் கடந்த 6ஆம் திகதி மஸ்கெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில் இவர் தனது கணவருக்குத் தேநீரில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துத் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபருக்கு தொலைபேசி ஊடாக அழைப்பு விடுத்து தனது வீட்டிற்கு வரவழைத்ததாக ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து இவர் ஹட்டன் மாவட்ட மற்றும் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட கணவர் சுகயீனமடைந்துள்ள நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திக்ஓயா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு