இறுதிப் யுத்த காலப்பகுதியில் இழந்த ஆவணங்களை மீள வழங்குவதற்காக நடமாடும் சேவை..

ஆசிரியர் - Editor I
இறுதிப் யுத்த காலப்பகுதியில் இழந்த ஆவணங்களை மீள வழங்குவதற்காக நடமாடும் சேவை..

வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது இழந்த அரச ஆவணங்களை வழங்குவதற்காக தேசிய நல்லிணக்க அரசகரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் 

நடமாடும் சேவை எதிர்வரும் 29ம் திகதி பூநகரியில் இடம்பெறவுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் தேசிய நல்லிணக்க அரசகரும மொழிகள் அமைச்சின் மேலதிக செயலாளர் விபரம் தெரிவிக்கையில் ,

சட்ட ரீதியான ஆவணங்களை தொலைத்தவர்கள் மற்றும் புதிய தேவையுடையவர்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் மேற்படி நடமாடும் சேவை நாடு பூராகவும்  இடம்பெறுகின்றது. 

இதில் விசேடமாக யுத்தம் இடம்பெற்ற பிரதேசத்தில் வாழ்பவர்கள் அதிகமானோர் தமது அன்றாட தேவையுடைய அணைத்து சட்டரீதியான  ஆவணங்களையும் 

தவறவிட்ட நிலையிலேயே கானப்படுகின்றனர். இதனால் குறித்த நடமாடும் சேவையில் 21 திணைக்களங்களின் சேவையினை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக பூநகரி மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ள நடமாடும் சேவையில் காணி உறுதிகள் , காணி அனுமதிப் பத்திரம் , 

பிறப்பு திருமணஞ் சான்றிதழ் , அடையாள அட்டை என்பன அனைத்தும் இலவசமாகவே வழங்கப்படும். 

அடையாள அட்டைக்கு தேவையான புகைப்படம் முதல் முத்திரைகள் வரை அந்த இடத்தில் உடனடியாகவே இலவசமாக வழங்கப்படும். 

இதனால் இவ்வாறான தேவை உடையவர்கள் அனைவரும்குறித்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்த முடியும். 

இதேநேரம் தேசிய நல்லிணக்க அரசகரும மொழிகள் அமைச்சின் பிராந்திய அலுவலகம் எதிர்வரும் 30ம் திகதி கிளிநொச்சி 

தொண்டமான்நகர்ப் பகுதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்காவினால் திறந்துவைக்கப்படவுள்ளது. என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு