தமிழரசுக் கட்சி உடைந்தது!

ஆசிரியர் - Editor II
தமிழரசுக் கட்சி உடைந்தது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஆசன பங்கீடு தொடர்பில் இழுபறி நிலவி வந்த நிலையில் டெலோக்கு அதிகமான இடத்தை தமிழரசுக் கட்சி ஒதுக்கிக் கொடுத்துள்ளது.

அந்த வகையில் டெலோவால் கேட்கப்பட்ட இடங்கள் தமிழரசுக் கட்சியால் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழரசுக் கட்சி பல ஆதரவு தளங்களை இழக்க நேரிட்டுள்ளது.

அத்துடன் இந்த செயற்பாட்டால் அதிருப்தி அடைந்த தமிழரசுக் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள், ஆதரவாளர்கள் கனிசமான இடங்கள் வழங்கப்படாத சபைகளில் சுயேற்சையாக செயற்பட தீர்மானித்துள்ளது.

உடைந்தது தமிழரசுக் கட்சி

சுயேற்கையாக செயற்பட்டு தமிழரசுக் கட்சியின் இருப்பை தக்கவைத்து கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்காரணமாக வட்டார தேர்தலில் சுயேற்சை குழுக்களாக கட்டுப்பணம் செலுத்தி தமிழரசு கட்சியின் வரலாற்று பதிவை அடையாளப்படுத்துவதற்காக செயற்படவுள்ளதாக பெயர்குறிப்பிட விரும்பாத தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரொருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஏனைய கட்சிக்கு விட்டுக் கொடுத்து தமிழரசுக் கட்சி அதன் பிளவிற்கு வித்திடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தமிழரசுக் கட்சியன் சிரேஸ்ர தலைவர்கள் செய்வதறியாது தடுமாறுவதுடன் தொண்டர்களின் கோபம் சரியானது.

இன் நிலை நீடித்தால் முடிவுகள் மாற்றியமைக்க தமிழரசுக் கட்சி கட்டாயம் உடன் பட வேண்டும் என தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட மேற் குறிப்பிட்ட தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரிடம் எதிர் கட்சித் தலைவர் சம்பந்தன் குறிப்பிட்டதாக மேலும் குறிப்பிட்டார்.

புதிய தேர்தல் முறையுடன் தமிழரசுக் கட்சிக்கு மங்கு சனி ஆரம்பமாகி விட்டதுடன் வடக்கு - கிழக்கில் தமிழரசுக் கட்சியின் சுயேற்சை அணியினர் தமது உறுப்பினர்களை தெரிவு செய்து முடித்துள்ள நிலையில் இறுதிக் கட்டத்திற்கு தயாராவதாக மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு