பனி பூமியில் 8 விநாடிகள் வானில் பறந்து ஜப்பான் வீரர் சாகசம்

ஆசிரியர் - Editor I
பனி பூமியில் 8 விநாடிகள் வானில் பறந்து ஜப்பான் வீரர் சாகசம்

ஜப்பானை சேர்ந்த பனிச் சறுக்கு விளையாட்டு வீரர் ரியோயு கோபயாஷி ( Ryoyu Kobayashi), ஐஸ்லாந்து நாட்டில் நடந்த பனிச் சறுக்கு நீளம் தாண்டுதல் போட்டியில் 291 மீட்டர் தொலைவுக்கு தாண்டி உலக சாதனை படைத்தார்.

27 வயதான ரியோயு கோபயாஷி, நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்றபோது மணிக்கு 107 கிலோ மீட்டர் வேகத்தில் பனிச் சறுக்கு விளையாட்டை தொடங்கினார்.

கரடு முரடான பனி மலையில் விளையாடுவதற்கு முன்பு ரியோயு கோபயாஷிக்கு உடல் தகுதி பரிசோதனை நடத்தப்பட்டது. 2022 ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றவர் ரியோயு கோபயாஷி.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு