SuperTopAds

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கப்பட்ட வாக்குறுதியை மீறிய பிரதமர்..

ஆசிரியர் - Editor I
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கப்பட்ட வாக்குறுதியை மீறிய பிரதமர்..

மன்னார் மாவட்டச் செயலாளராக மோகன்ராயச்சின் பெயரும் வவுனியா மாவட்டச் செயலாளராக   கனீபாவின் பெயரும் நேற்றைய அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டு வர்த்தகமானி அறிவித்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தின் செயலாளராகப்பணியாற்றிய தேசப்பிரியா கடந்த மார்ச் மாதம் 12ம் திகதி மாற்றலாகிச் சென்ற நிலையில் புதிய செயலாளர் நியமனத்தில் பெரும் தாமதமும் தடைகளும் கானப்பட்டது. இதனால் நீண்ட இழுபறி காணப்பட்டது. 

இதில் குறிப்பாக தமிழ் , முஸ்லீம் வர்க்க வேறுபாடும் நீண்ட தாக்கத்தைச் செலுத்தி வந்தது. இந்த நிலையில் மன்னார் மாவட்டத்திற்கு மோகன்ராச்சை கடந்த வாரமே நியமிக்க நடவடிக்கை எடுத்தபோதும் நீண்ட தடைகானப்பட்டது. 

இருப்பினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலமைக்கு பிரதமர் அளித்த வாக்குறுதியின் பிரகாரம் மாவட்டச் செயலாளரை நியமிக்குமாறு கூட்டமைப்பும் தொடர் அழுத்தம் கொடுக்கப்பட்டது.

பிரதமரின் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக வழங்கிய உத்தரவாத்த்தின்போது வடக்கின் 5 மாவட்டத்திற்கும் தமிழ் செயலாளர் நியமிக்கப்பனுவார் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்ட நிலையில் 

தற்போது மன்னார் மாவட்டத்திற்கு தமிழ் செயலாளர் நியமிக்கப்பட்டபோதும் வவுனியாவிற்கு முஸ்லீம்ஒருவரே நியமிக்கப்பட்டுள்ளார்.