கேரளாவிலும் கேரவன் ஏறிய விஜய்!.. திருவனந்தபுரத்தில் திரும்பிய பக்கமெல்லாம் தளபதி கோஷம்!..

ஆசிரியர் - Admin
கேரளாவிலும் கேரவன் ஏறிய விஜய்!.. திருவனந்தபுரத்தில் திரும்பிய பக்கமெல்லாம் தளபதி கோஷம்!..

நடிகர் விஜய் கோட் படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங்கிற்காக கேரளா சென்றுள்ள நிலையில், விமான நிலையத்திலேயே அவரது கார் கண்ணாடிகள் வரை உடைத்து ரசிகர்கள் அன்பு பொங்க கலவரம் செய்து விட்டனர்.

இந்நிலையில், கேரளாவில் படப்பிடிப்பு நடைபெறும் இடத்தையும் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் சுற்றி வளைத்து விட்டனர். அங்கே குவிந்துள்ள ஆயிரக் கணக்கான ரசிகர்களை காண்பதற்காக நடிகர் விஜய் இன்று மாலை கேரவன் மீது ஏறி ரசிகர்களுக்கு வணக்கம் தெரிவித்து அவர்களுடன் செல்ஃபியும் எடுத்துக் கொண்டார்.

கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் தான் கோட் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அங்கே விஜய்யை கண்ட ரசிகர்கள் தளபதி தளபதி என கோஷம் போட ஆரம்பித்து விட்டனர்.

இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும் ரசிகர்கள் கேரளாவில் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். இலங்கைக்கு பதிலாக கேரளாவுக்கு படப்பிடிப்பை மாற்றியது நடிகர் விஜய்க்கு வசதியாக போய் விட்டது. பல வருடங்களாக தன் மீது அன்பு செலுத்தி வரும் கேரள ஃபேன்ஸ்களை சந்திக்கும் வாய்ப்பை தற்போது பெற்றுள்ளார்.

லியோ படத்துக்கு கேரளாவில் ஏற்பட்ட டிமாண்ட் குறித்து பிருத்விராஜ் ஆடுஜீவிதம் படத்தின் புரமோஷனில் பேசியது குறிப்பிடத்தக்கது.

மஞ்சுமெல் பாய்ஸ் வசூல் எல்லாம் என்னங்க, ஒவ்வொரு முறையும் விஜய் படங்கள் கேரளா பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிடுது என அவர் பேசியிருந்தார்.

கோட் படம் ரசிகர்களுக்கு நிச்சயம் வேறலெவல் விஷுவல் ட்ரீட்டாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. வெங்கட் பிரபு இத்தனை லட்சம் ரசிகர்களுக்கு தேவையான தரமான படத்தை கொடுப்பார் என நம்புகின்றனர். கஸ்டடி போல சொதப்பாமல் இருந்தால் சரி தான்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு