தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்த மண்ணில் கரும்புலிகள் நாள் நினைவேந்தல்..

ஆசிரியர் - Editor I
தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்த மண்ணில் கரும்புலிகள் நாள் நினைவேந்தல்..

தமிழிழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த வல்வெட்டிதுறை மண்ணில் கரும்புலி நாள் நினைவு மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. 

ஜீலை 5 ஆம் திகதி புலிகளினால் கரும்புலி நாளாக கடந்த 2009 ஆம் ஆண்டிற்கு முன்னரான காலப் பகுதிகளில் எழுச்சியாக நடைபெற்று வந்தன.

 ஆயினும் யுத்தம் முடிவடைந்த பின்னர் தடைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரமாண இந் நினைவு நாள் மிகவும் இரகசியமாக ஒரு சில இடங்களில் மட்டுமே அனுஷ்டிக்கப்பட்ட வந்தன.

இந் நிலையில் கரும்புலி நாள் நிகழ்வுகள் இம் முறை யாழ்ப்பாணத்தில் மிக உணர்வு பூர்வமாக இடம் பெற்றிருக்கின்றன.புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் இந் நினைவு அனுஸ்டிப்புக்கள் இடம்பெற்றன.

இதற்கமைய முதற் கரும்புலி மில்லர் வீரச்சாவடைந்த நெல்லியிடி பாடசாலைக்கு முன்பாக இன்று மதியம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தி கரும்புலிகள் நினைவு கூரப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து இன்று மாலை புலிகளின் தலைவர் பிரபாகரனினது சொந்த இடமான வல்வெட்டிதுறையிலும் கரும்புலிகள் நினைவு அனுஸ்டிக்கப்பட்டது. 

வல்வெட்டிதுறையில் அமைக்கப்பட்டிருக்கின்ற மாவீர்ர் சங்கரின் நினைவிடத்தில் புலிகளின் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு மிக உணர்வு பூர்வமாக கரும்புலிகளின் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு