கிளிநொச்சி-அக்கராயனனை ஆண்ட அக்கிராசன் மன்னனின் சிலை திறப்பு..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி-அக்கராயனனை ஆண்ட அக்கிராசன் மன்னனின் சிலை திறப்பு..

கிளிநொச்சி அக்கராயன் பிரதேசத்தை ஆண்ட குறுநில மன்னனான அக்கிராசன் மன்னனின் உருவச்சிலை திறப்பு விழா இன்று (05-07-2018)காலை வெகுசிறப்பாக நடைபெற்றுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் அக்கராயன் அம்பலப்பெருமாள்ச் சந்தியில் கரைச்சிப்பிரதேச சபையினால் நிறுவப் பெற்ற மேற்படி உருவச்சிலை  திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி  உருவச்சிலைத்திறப்பு விழாநிகழ்வு கரைச்சி  பிரதேசசபையின் தவிசாளர் அ.வேலமாளிகிதன் தலைமையில் இன்று காலை  10-30 மணியளவில்  நடைபெற்றுள்ளது.

இன் நிகழ்வில் பிரதமவிருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராஜா சி.சிறீதரன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களான வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான த.குருகுலராஜா, 

ப.அரியரத்தினம் யாழ் நகரசபை உறுப்பினர் சொலமன் சூ சிறில் மற்றும்கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.


Radio