தீவிரமாகும் விவசாயிகள் போராட்டம்!! -டெல்லியில் 7 மாவட்டங்களில் இணைய சேவைக்கான தடை நீட்டிப்பு-

ஆசிரியர் - Editor II
தீவிரமாகும் விவசாயிகள் போராட்டம்!! -டெல்லியில் 7 மாவட்டங்களில் இணைய சேவைக்கான தடை நீட்டிப்பு-

புதுடெல்லியில் உள்ள பஞ்சாப்-ஹரியாணாவின் ஷம்பு எல்லையில் நேற்றும் ஒன்று திரண்ட விவசாயிகள் டெல்லி சலோ என்ற முழக்கத்தை முன்வைத்து டெல்லி நகரை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர்.

அவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

இதனால், பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே பயங்கர தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விவசாயிகளின் போராட்டம் தீவிரமடையாமல் தடுப்பதற்காக, ஹரியாணாவின் அம்பாலா, குருஷேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார் பதேஹாபாத் மற்றும் சிர்சா ஆகிய 7 மாவட்டங்களில் இணைய சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, காஜிபூர் எல்லையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனிடையே, பிரச்சினைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தைக்கு வருமாறு பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி, சன்யுக்த் கிசான் மோர்ச்சா மற்றும் விவசாய சங்க தலைவர்களுக்கு மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா அழைப்பு விடுத்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு