”அய்யா எங்களை மன்னித்து விடுங்கள்...” சமூக வலைத்தளங்களில் பாராட்டு பெறும் திருடன் - நடந்தது என்ன?

ஆசிரியர் - Editor I
”அய்யா எங்களை மன்னித்து விடுங்கள்...” சமூக வலைத்தளங்களில் பாராட்டு பெறும் திருடன் - நடந்தது என்ன?

காக்கா முட்டை திரைப்பட இயக்குநர் மணிகண்டனின் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வீட்டிலிருந்து திருடப்பட்ட தேசிய விருதுக்கான இரு வெள்ளி பதக்கங்களை அவரது வீட்டு வாசலில் மன்னிப்பு கடிதத்துடன் கொள்ளை கும்பல் கேட்டில் தொங்க விட்டு சென்றுள்ளது.

“அய்யா எங்களை மன்னித்து விடுங்கள் உங்கள் உழைப்பு உங்களுக்கு” என அக்கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது. கடந்த 8 ஆம் தேதி அவர் வீட்டில் இல்லாத போது நுழைந்த கொள்ளைக்கும்பல் விருது பதக்கங்களுடன் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 5 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு