SuperTopAds

டெனீஸ்வரன் உட்பட வடமாகாணசபையின் 5 அமைச்சா்களின் பெயா்களை வெளியிடுமாறு ஆளுநா் முதலமைச்சருக்கு கடிதம்..

ஆசிரியர் - Editor I
டெனீஸ்வரன் உட்பட வடமாகாணசபையின் 5 அமைச்சா்களின் பெயா்களை வெளியிடுமாறு ஆளுநா் முதலமைச்சருக்கு கடிதம்..

வடக்கு மாகாண சபையில் டெனீஸ்வரனும்  சட்டப்படியான அமைச்சர் என்பதனால் ஏனைய மூன்று அமைச்சர்கள் யார் என்பதனை தெரியப்படுத்துமாறு ஆளுநர் முதல்வரிடம் கோரியுள்ளார்.

வடக்கு மாகாண சபை தொடர்பில் மேன் முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் தற்போது டெனீஸ்வரனும் ஓர் அமைச்சர் என்பதனை சட்டரீதியாக ஏற்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு மாகாண சபையில் தற்போது 6 அமைச்சர்கள் காணப்படுவதனால் அமைச்சர்களை 5பேராக மாற்றவேண்டிய தேவை உள்ளது.

அவ்வாறு 5 அமைச்சர்களாக மாற்றம் செய்யும்வரையில் உத்தியோக பூர்வமாக வடக்கு மாகாண அமைச்சரவை இயங்க முடியாது. எனவே அமைச்சரவையினை 5 பேராக மாற்றும் பொறுப்பு நீதிமன்ற ஆணையின்படி ஆளுநருக்கே வழங்கப்பட்டுள்ளதனால் அதனை நிறைவேற்றவேண்டிய கட்டாயம் ஆளுநருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக டெனீஸ்வரன் உள்ளடங்களாக ஏனைய அமைச்சர்களின் பெயரை உடனடியாக பரிந்துரைகுமாறு முதலமைச்சரை தற்போது ஆளுநர் கோரியுள்ளார்.