ஜனாதிபதி தேர்தலானது குறித்த தினத்தில் நிச்சயமாக நடைபெறும் -தேசிய மக்கள் சக்தியின் கே.டி லால் காந்த தெரிவிப்பு

ஆசிரியர் - Editor III
ஜனாதிபதி தேர்தலானது குறித்த தினத்தில் நிச்சயமாக நடைபெறும் -தேசிய மக்கள் சக்தியின் கே.டி லால் காந்த தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலானது குறித்த தினத்தில் நிச்சயமாக நடைபெறும் -தேசிய மக்கள் சக்தியின் கே.டி லால் காந்த தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலானது குறித்த தினத்தில் நிச்சயமாக நடைபெறும்.தற்போது உள்ள ஜனாதிபதியின் ஆட்சி காலத்தின் கடைசி நாள் எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆந் திகதியாக இருக்கின்றது.இதற்கமைய ஏற்கனவே புதிய ஜனாதிபதியான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் தற்போது தீர்மானித்து விட்டார்கள்.இலங்கையின் புதிய ஜனாதிபதி எதிர்காலத்தில்அனுர குமார திஸநாயக்க வருவார் என்ற அச்சத்தில் அரசாங்கம் தேர்தலை நடாத்த பின்னிற்கின்றது என  தேசிய தொழில் சங்க சம்மேளனத்தின் தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினருமாகிய கே.டி  லால் காந்த தெரிவித்தார்.

அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனம் ஏற்பாட்டில் இடம்பெறும் 2024 ஆண்டிற்கான  அம்பாறை மாவட்ட மீனவர் மாநாடு  சாய்ந்தமருது மருதூர் சதுக்கத்தில் புதன்கிழமை(24) மாலை நடைபெற்ற வேளை மேற்கண்டவாறு தனதுரையில் குறிப்பிட்டார்.


மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது


தேசிய மக்கள் சக்தி தேர்தல்களில் வெற்றி பெறும் என்பதனால் அவர்கள் தேர்தல்களை நடாத்துவதற்கு பின்னிற்கின்றனர்.ஆனால் உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல்களை நடாத்த முடியாவிட்டாலும் யாப்பின் பிரகாரம் பிரதேச மற்றும் நகர சபைகளை நடாத்தி செல்லும் சட்டமூலம் காணப்படுகின்றது.மாகாண சபை தேர்தல் இல்லை.மாகாண சபையில் மக்கள் பிரதிநிதிகள் இல்லை.இப்பொழுது ஆளுநர்களை வைத்து ஆட்சியை அவர்கள் நடாத்தி செல்கின்றார்கள்.


இதற்கும் எமது திசைகாட்டி என்பது வெல்லும் என்ற காரணத்தினால் தான் தேர்தல் இன்னும் நடாத்தப்படவில்லை.உள்ளுராட்சி தேர்தல்கள் தற்போது பிற்போடப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் ஜனாதிபதி தேர்தலும் பிற்போடப்படுமா என்ற கேள்வியும் பொதுமக்கள் இடையே எழுந்து வருகின்றது.எனவே தான் இங்கு மக்களுக்கு ஒரு விடயத்தை நாம் கூற விரும்புகின்றோம்.அதாவது பிரதேச சபை தேர்தலை பிற்போடலாம்.மாகாண சபை தேர்தலை பிற்போடலாம்.ஆனால் ஜனாதிபதி தேர்தலை பிற்போட முடியாது.ஏனெனில் ஜனாதிபதி ஒருவர் இன்றி இந்த நாட்டின் ஆட்சியை மேற்கொள்ள முடியாது என்ற காரணமாகும்.ஆகவே தான் இந்த இடத்தில் தெளிவான விடயம் ஒன்றினை கூற விரும்புகின்றேன்.ஜனாதிபதி தேர்தலானது குறித்த தினத்தில் நிச்சயமாக நடைபெறும்.


தற்போது உள்ள ஜனாதிபதியின் ஆட்சி காலத்தின் கடைசி நாள் எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆந் திகதியாக இருக்கின்றது.இதற்கமைய ஏற்கனவே புதிய ஜனாதிபதியான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் தற்போது தீர்மானித்து விட்டார்கள்.இத்தேர்தலில் சஜித் பிரேமதாசவும் ரணிலும் வேட்பாளர்களாக வருவார்களாம்.ஆனால் தற்போதைய  புலனாய்வு அறிக்கை மற்றும் இதர ஆய்வுகளின் அடிப்படையிலும் எதிர்கால ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க வருவார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இன்னும் 7 மாதங்களில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட்டு தேர்தலுக்கான ஏற்பாடுகள் இடம்பெறவுள்ளன.இப்போது நாட்டின் தலைவர் ரணில்-ராஜபக்ஸ என்பது ஒன்றாக பூட்டப்பட்ட பூட்டு.அதை எம்மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.


வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு