யாழ்.மருதங்கேணியில் தென்பகுதி மீனவா்களின் அத்துமீறல்கள் தொடா்பான பிரச்சினைகளை தமிழ் அரசியல்வாதிகள் பேசா பொருளாக மாற்றியுள்ளாா்கள்..

தமிழ் அரசியல்வாதிகள் சிலருடைய தலையீட்டினாலேயே மருதங்கேணியில் தென்பகுதி மீனவர்களின் அடத்தான நடவடிக்கைகள் இன்று பேசா பொருளாக மாறியுள்ளதாக யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் எஸ்.தவச்செல்வம் கூறியுள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பில் இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இச் சந்திப்பின்போது மேலும் அவர் கூறுகையில்,
மருதங்கேணி பகுதியில் தென்பகுதியை சேர்ந்த மீனவர்கள் அடாத்தாக தங்கியிருந் து கடலட்டை பிடிப்பதனால் எமது மீனவர்கள் மோசமான பாதிப்புக்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கின்றது.
இது தொடர்பாக மக்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியிருந்ததுடன், போராட்டங்களையும் நடாத்தியிருந்தார்கள். இந்நிலையில் அரசியல்வாதிகள் சிலர் அந்த பிரச்சினைக்குள் வந்தார்கள். அவர்கள் மக்களை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும் நாங்கள் குற்றஞ்சாட்டவில்லை. மருதங்கேணி மீனவர்கள் விடயத்தில் தலையீடு செய்த தமிழ் அரசியல்வாதிகளையே நாங்கள் குறிப்பிடுகிறோம்.
மருதங்கேணி மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக அரசியல்வாதிகள் மத்திய கடற்றொழில் அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க கூடாது. உண்மையில் மீனவர்களும், மீனவர் அமைப்புக்களுமே அந்த பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருக்க வேண்டும்.
அரசாங்கத்திற்கும் இந்த விடயம் தெரியும். ஆனால் அவர்களும் தங்களை நல்ல பிள்ளைகளாக காட்டிக் கொள்வதற்காக அரசியல்வாதிகளுடன் பேசியிருக்கி
றார்கள். நாங்கள் கேட்கிறோம் இதே அரசியல்வாதிகளால் புத்தளத்திலோ?
நீர் கொழும்பிலோ? சுpலாபத்திலோ? எங்களுடைய படகுகளை கொண்டு சென்று மீன்பிடிக்க வைக்க இயலுமா? இயலாது. காரணம் அங்குள்ளவர்கள் அதற்கு இடமளிக்கமாட்டார்கள். இந்நிலையில் மக்கள் அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டுள்ளதுடன் மட்டுமல்லாமல்,
மருதங்கேணியில் நடைபெற்ற அத்துமீறலை இன்றைக்கு பேசா பொருளாகவும் மாற்றியுள்ளா ர்கள் என்றார்.