சம்மாந்துறை அல் - அஷ்ஹரின் புதிய அதிபராக ஏ.அப்துல் ஜப்பார்

ஆசிரியர் - Editor III
சம்மாந்துறை அல் - அஷ்ஹரின் புதிய அதிபராக ஏ.அப்துல் ஜப்பார்

சம்மாந்துறை அல் - அஷ்ஹரின் புதிய அதிபராக ஏ.அப்துல் ஜப்பார்

சம்மாந்துறை அல்-அஷ்ஹர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.அப்துல் ஜப்பார்( SLPS -ii)பதவியேற்கும் நிகழ்வு பாடசாலை வளாகத்தில் , பாடசாலையின் ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள்  மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் என்பவற்றின் ஏற்பாட்டில் இன்று  (16) மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

நிகழ்வில், சம்மாந்துறை வலய கல்வி அலுவலகத்தின் நிர்வாகத்துக்கு பொறுப்பான பிரதிக் கல்வி பணிப்பாளர் பி.எம்.வை.அறபாத் (SLEAS) மற்றும் அல்-முனீர் வித்தியாலய அபிவிருத்தி சங்க செயலாளர் வி. முஹம்மட், கோட்ட கல்வி அலுவலக உத்தியோகத்தர் ஏ.பி.சஜாத், அல்-முனீர் வித்தியாலய அபிவிருத்தி சங்க முன்னாள் செயலாளர் ஏ. எம். கபீர் , அல்-முனீர் வித்தியாலய அபிவிருத்தி சங்க உறுப்பினர்களான ஏ. எல். அமீர் முஹம்மட்,அலியார், றியாஸ் மற்றும் அல்-அஷ்ஹர் வித்தியாலயத்தின் பழய மாணவர்களான ஏ.எம் .ஹரீஸ் , எம்.எஸ்.எம்.அப்ரிட் , எம்.எம்.தாரிக் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

புதிதாக பதவியேற்ற அதிபர் 20 வருட ஆசிரிய சேவையிலும் 15 வருட அதிபர் சேவையிலும் மொத்தமாக 35 வருடத்தை கல்விப்பணிக்காக அர்ப்பணித்துள்ளத்துடன் இந்த பாடசாலைக்கு நியமனம் பெறுவதற்கு முதல் கமு/சது/கஸ்ஸாலி வித்தியாலயம், கமு/சது/ அல்-முனீர் வித்தியாலயத்திலும் அதிபராக கடமை புரிந்து மாணவர்களுக்கு சிறந்த சேவையை ஆற்றியுள்ளார். 

நிகழ்வில் உரை நிகழ்த்திய பாடசாலையின் புதிய அதிபர், எதிர்வரும் காலங்களில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எவ்வாறு செயற்பட வேண்டுமெனவும் கல்வியின் அடைவு மட்டங்களை முன்னிலைக்கு கொண்டு வருவது குறித்தும் சிறப்புரை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இன் நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் இறுதியாக அதிபரினால் மரம் ஒன்றும் பாடசாலையின்  ஆசிரியர்கள் முன்னிலையில்,பாடசாலையின் வளாகத்தில் நடப்பட்டது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு