SuperTopAds

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நெயினாக்காடு பிரதேச மக்களுக்கு ACMC இளைஞர் அமைப்பினால் சமைத்த உணவு வழங்கப்பட்டது..!

ஆசிரியர் - Editor III

கிழக்கு மாகாணத்தில் பொழிந்த அதிக மழை வீழ்ச்சியினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்கள் பாதிப்புக்கு உட்பட்டதனால் மக்கள் பல்வேறு அசெளகரீகங்களை சந்தித்து வருகின்றனர். 

குறிப்பாக சம்மாந்துறைப் பிரதேசத்தில் நெயினாக்காடு பகுதியில் வசிக்கும் மக்கள் வெள்ளப்பெருக்கினால் அதிகமாக பாதித்துள்ளதுடன் மக்கள் இருப்பிடமின்றி பாடசாலைகளில் முகாமிட்டு தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். 

இதனைக் கருத்திற்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சம்மாந்துறை இளைஞர்கள் அமைப்பினர்,  இன்று (13) சனிக்கிழமை நெயினாக்காடு பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உணவு சமைத்து, பொதியிட்டு அவர்கள் இருக்கும் இடத்தைத் தேடிச் சென்று சமைத்த உணவை வழங்கினர் அல்ஹம்துலில்லாஹ். 

மிக குறுகிய காலத்திற்குள் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சம்மாந்துறை  இளைஞர்கள் காங்கிரஸின் தலைமை அமீர் அப்fனானின் உடனடி நடவடிக்கைகளுக்கு அமைவாக இவ் ஏற்பாடு செய்யப்பட்டது. 

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்  அம்பாரை மாவட்ட செயலாளர் காதர், முன்னள் பிரதேச சபை உப தவிசாளர் அச்சி முகம்மட், உறுப்பினர்களான ரியாஸ், மற்றும் ஜிப்ரி (சலீம் வட்டானை) சிரேஷ்ட உறுப்பினர்களான நபீல், ஹனீபா,மன்சூர்,அன்வர் மற்றும் இளைஞர்கள் காங்கிரஸ் அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.