சம்மாந்துறையில் பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாச புத்தகங்கள் வழங்கி வைப்பு

ஆசிரியர் - Editor III
சம்மாந்துறையில் பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாச புத்தகங்கள் வழங்கி வைப்பு

சம்மாந்துறையில் பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாச புத்தகங்கள் வழங்கி வைப்பு 

 சம்மாந்துறை பொது சமூக சேவைகள் அமைப்பினால் வருடாந்தோறும் இடம்பெறும் மாணவர்களுக்கான ஊக்குவிப்பு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இவ் வருடத்திற்கான 1500 மாணவர்களுக்கு அபியாச புத்தகங்கள் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (13) ஆரம்பிக்கப்பட்டது.

இதன் முதற்கட்டமாக 500 மாணவர்களுக்கான புத்தகங்கள் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் உள்ள தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வழங்க தெரிவு செய்யப்பட்ட  அமைப்பின் உறுப்பினர்களிடம் வழங்கி வைக்கப்பட்டதுடன்  எதிர் வரும் காலங்களில் காலனியும் வழங்க உள்ளதாக அமைப்பின் தலைவர் இளைஞர் பாரளுமன்ற உறுப்பினர் அமீர் அப்னான் தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்வில் பொது சமூக சேவைகள் அமைப்பின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் ஏனைய நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பிரதேச வாரியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் கழகங்களின், அமைப்புகளின் உறுப்பினர்கள் கலந்து என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு