DIALOG நிறுவனத்தின் மீது தென்மராட்சி இளைஞர் செய்த முறைப்பாட்டை ஏற்க மறுத்த யாழ் பொலிஸ்..!!

ஆசிரியர் - Editor II
DIALOG நிறுவனத்தின் மீது தென்மராட்சி இளைஞர் செய்த முறைப்பாட்டை ஏற்க மறுத்த யாழ் பொலிஸ்..!!

உரிமையாளர் சிம்மை பாவித்துக் கொண்டு இருக்கும் பொழுதே அந்த சிம் இணைப்பை துண்டித்து பெயர் மாற்றம் எதுவும் செய்யாமல் உரிமையாளருக்கு எந்த ஒரு அறிவித்தலும் வழங்கப்படாமல் அதே இலக்க சிம்மை யாரோ ஒருவருக்கு தபால் மூலம் Dialog நிறுவனத்தால் அனுப்பட்டுள்ளது.

தனது சிம் துண்டிக்கப்பட்டதை அடுத்து Dialog நிறுவனத்துடன் தொடர்பு கொண்டுள்ளார் அப்போது முகவர் தபால் மூலம் சிம் எடுக்கப்பட்டதை உறுதி செய்துள்ளார்.

ஆனால் சிம் உரிமையாளருக்கு வேறு எந்த தகவலும் வழங்கவில்லை. இதனையடுத்து உரிமையாளர் யாழ்ப்பாணம் Dialog நிலையத்தை நாடி இச்சம்பவம் தொடர்பாக முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

மற்றும் அவருடைய சிம்மை செயற்படுத்தி இனி எந்த தவறும் நடக்காது என்றும் தாபால் மூலம் அனுப்பட்ட சிம் துண்டிக்கப்பட்டு விட்டதாகவும் வாக்களித்தனர்.

ஆனால் மறுபடியும் 24 மணி நேரத்தில் உரிமையாளரின் சிம் துண்டிக்கப்பட்டு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ள சிம்மை செயற்படுத்தி குடுத்துள்ளனர்.

மீண்டும் இது பற்றி Dialog முகவரை தொடர்பு கொண்டு கேட்ட போது சிம்முடைய உரிமையாளர் பெயரை மாற்ற சொல்லுகின்றனர். நிறுவனத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன.

இதனால் அறியத்தருவது என்னவென்றால் வாடிக்கையாளர்களின் இரகசியத்தன்மை மற்றும் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை தன்மை கேள்விக்குறியா ? ஆகவே இது மாதிரியான பொறுப்பற்ற செயற்பாடுகளால் நிறுவனத்தின் மீது சிம் உரிமையாளர் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக பொலிஸ் நிலையம் சென்று முறையிட்டபோதும் அவ் முறைப்பாட்டை பொலிசார் ஏற்கவில்லை. என்பது குறிப்பிடதக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு