SuperTopAds

இந்திய அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட பாடசாலை கட்டிடங்கள் திறந்துவைப்பு..

ஆசிரியர் - Editor I
இந்திய அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட பாடசாலை கட்டிடங்கள் திறந்துவைப்பு..

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ்.மண்டைதீவில் றோமன் கத்தோலிக்க தமிழ் க லவன் பாடசாலை மற்றும் மெலிஞ்சி முனை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை ஆகியவற்றில் அமைக்கப்பட்ட வகுப்பறை கட்டிடங்கள் நேற்று திறந்துவைக்கப்பட்டது. 

மேற்படி இரு கட்டிடங்களும் தலா 8 மில்லியன் ரூபாய் பெறுமதியில் புனரமைப்பு செய்யப் பட்டிருக்கின்றது. மேற்படி கட்டிடங்களை இந்திய துணை தூதுவர் ச.பாலச்சந்திரன் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சர் ஆகியோர் இணைந்து திறந்து வைத்துள்ளனர். 

மேலும் இந்திய அரசினால் 250 மில்லியன் ரூபாய் செலவில் தெரிவு செய்யப்பட்ட பல பாடசாலைகளில் வகுப்பறை கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றது. இதேபோல் வடமாகாணத்தின் கல்வி மேம்பாட்டுக்கு இந்திய அரசு பல செயற்றிட்டங்களை மேற்கொள்கிறது. 

இதன்படி 79 பாடசாலைகளை புனரமைப்பு செய்வதற்காக 187.7 மில்லியன் ருபாய் ஒதுக்கீடு செய்துள்ளதுடன், பாடசாலை மாணவர்களுடைய தேவைக்காக 110 பேருந்துகளை கொள்வ னவு செய்வதற்காக 146 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. 

மேலும் கிளிநொச்சியில் உள்ள யாழ்.பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் பொறியியல் பீடங்களை அமைக்க 600 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கி பணிகள் நிறைவடைந்துள்ளன. இதேபோல் யாழ்.தேசிய கல்வியியல் கல்லூரிக்கு ஆங்கில மொழி ஆய்வுகூடம்

சுமார் 10 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டுள்ளதுடன், வடமாகாணத்தில் உள்ள மாணவர்கள் இந்தியா சென்று உயர்கல்வியை தொடர்வதற்கான வாய்ப்புக்களும் செய்யப்பட்டிருக்கின்றது.