குற்ற செயல்களை கட்டுப்படுத்த விழிப்பு குழுக்களை உருவாக்க திட்டம்...
உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் சகலரும் கட்சி பேதங்களை கடந்து தமது வட்டாரங்களில் விழிப்பு குழுக்களை இந்த வார இறுதிக்குள் உருவாக்கவேண்டும். என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.
சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று நாடாளுமன்ற உறுப்பினரின் யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இ தன்போது மேலும் அவர் கூறுகையில்,
யாழ்.குடாநாட்டில் குற்ற செயல்கள் அதிகரித்திருப்பதுடன், கொரூரமான செயல்களும் அரங்கேறிக் கொ ண்டிருக்கின்றது. இவற்றை கட்டுப்படுத்த பொலிஸார் தவறுவதாக மக்கள் மத்தியில் பொதுவான குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
அவை நியாயமான குற்றச்சாட்டுக்கள். இந்நிலையில் குற்ற செயல்களை கட்டுப்படுத்து வதற்கு இளைஞர்கள் முன்வரவேண்டும். அது இன்றைய சூழலில் அத்தியாவசியமானதும் கூட நாங்களே எங்களை பாதுகாக்கவேண்டிய சூழல் வந்திருக்கின்றது.
அந்தவகையில் வன்முறைகளுக்கும், கொரூரமான சம்பவங்களுக்கும் காரணமானவர்கள் எங்க ளுடைய சமூகத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அந்தவகையில் விழிப்பு குழுக்கள் அவசியமான ஒன்றாக மாறியிருக்கின்றது.
யாழ்.மாவட்டத்தில் சகல உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் கட்சி பேதங்களை பார்க்கா மல் தமது வட்டாரங்களில் விழிப்பு குழுக்களை உரு வாக்குவதற்கான பொறுப்பை எடுக்கவேண்டும்.
இந்த வார இறுதிக்குள் சகல உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் இந்த பொறுப்பை எடுக்கவேண்டும். இந்த விழிப்பு குழுக்களில் இளைஞர்கள், விளையாட்டு கழகங்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை உள்ளீர்ப்பது நல்லது.
அதேபோல் உருவாக்கப்படும் விழிப்பு குழுக்கள் இரவு நேரங்களிலும், பிற நேரங்களிலும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு குற்ற செயல்களை கட்டுப்படுத்த ஆவண செய்யN வண்டும்.
மேலும் உருவாக்கப்படும் விழிப்பு குழுக்களுக்கு அந்தந்த பிரதேசங்களில் உள்ள பொலிஸா ருடன் தொடர்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்படுவதுடன், தேவையான சகல உதவிகளும் செய்து கொடுக்கப்படும் என்றார்.