வடமாகாண தொண்டா் ஆசிாியா்களுக்கு 22ம் திகதி நிரந்தர நியமனம்..
வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களிற்கான நியமனம் எதிர் வரும் 22ம்திகதி வழங்கப்படவுள்ளதாக பிரதமர் செயலகம் தெரிவிந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா தெரிவித்தார்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில் ,
வடக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக தொண்டர் அடிப்படையில் ஆசிரியர்களாக பணிபுரிந்ந நிலையில் கடந்த கால நியமனங்களின்போது அரசியல் ரீதியாகவும் பழிவாங்கப்பட்டு அப்போதும் நியமனம் வழங்கப்படாது புதியவர்கள் உள்வாங்கப்பட்டதாக தொண்டர்கள் தெரிவித்த நிலையில் தற்போது மீண்டும் நேர்முகத் தேர்வு இடம்பெற்றது.
இருப்பினும் அதன் பெறுபேற்றில் தாமதமடைவதாக தொண்டர்கள் தெரிவித்தமைக்கு இணங்க உரிய இடங்களுடன் தொடர்பு கொண்டோம்.அதன் அடிப்படையில் தற்போது நேர்முகத் தேர்வு 790 பேருக்கு இரண்டு கட்டமாக இடம்பெற்றவர்களில் இருந்து 425 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினர்.
அது சற்று ஆறுதல் அளிக்கும் விடயம் . இவ்வாறு தேர்வானவர்களிற்கான நியமனக் கடிதங்களை வழங்குவதற்காக பிரதமர் வருகை தரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. எஞ்சியவர்களையும் உள்வாங்கும் வழி முனை தொடர்பில் எதிர்வரும் 6ம் திகதி பிரதமரிடம் உரையாடுவோம்.இதேநேரம் குறித்த 425 தொண்டர்களிற்கான நியமனக் கடிதங்களும் யூலை மாதம் 22ம் திகதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த நேர்முகத் தேர்வில் தோற்றிய அனைவருக்கும் நியமனம் வழங்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை . இதேநேரம் மிக முக்கிய பிரச்சணையான பட்டதாரிகள் நியமன விடயம் ஏற்கனவே உறுதயளிக்கப்பட்டதன் பிரகாரம் போரினால் பாதித்த மாகாணத்திற்கு விசேட கரிசணைகொள்ள வேண்டும் . இதேநேரம் பட்டதாரிகளை தொடர்ந்தும் விண்ணப்பம் கோருவதாகவே உள்ளது.
அதனை விடுத்து ஏற்கனவே பெறப்பட்ட பட்டியலின்பிரகாரம் உடனடியாக நியமனத்தை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தற்போது முதல் கட்ட நியமனம் வழங்கவுள்ளதாக தெரிவித்தனர். இருப்பினும் இதுவரை வழங்காதமை தொடர்பிலும் குறித்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்படும். என்றார்.