SuperTopAds

சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கான நிரந்தர திடீர் மரண விசாரணை அதிகாரியாக ஏ.எச்.அல் ஜவாஹிர் நியமனம்.

ஆசிரியர் - Editor III
சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கான நிரந்தர திடீர் மரண விசாரணை அதிகாரியாக ஏ.எச்.அல் ஜவாஹிர் நியமனம்.

சம்மாந்துறை  பிரதேச செயலகத்திற்கான நிரந்தர திடீர் மரண விசாரணை  அதிகாரியாக ஏ.எச்.அல் ஜவாஹிர் நியமனம்.

சம்மாந்துறை  பிரதேச செயலகத்திற்கான நிரந்தர திடீர் மரண விசாரணை  அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மருதமுனையை பிறப்பிடமாகவும், சாய்ந்தமருதை வசிப்பிடமாகவும் கொண்ட ஏ.எச்.அல் ஜவாஹிர்   சம்மாந்துறை  பிரதேச செயலகத்திற்கான நிரந்தர திடீர் மரண விசாரணை அதிகாரியாக சம்மாந்துறை நீதவான்    ரி.கருணாகரன் முன்னிலையில் திங்கட்கிழமை(04.12.2023) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இவர் மரண விசாரணை டிப்ளோமா கொழும்பு பல்கலைக்கழகம் ஆங்கில டிப்ளோமா கற்கைநெறியினை  இலங்கை கிழக்கு பல்கலைக்கழகம்   மொழிபெயர்ப்பு டிப்ளோமா  கற்கை நெறியினை பேராதனைப் பல்கலைக்கழகம்  ஆகியவற்றில் பூர்த்தி செய்துள்ளார்.அத்துடன்   ஒரு ஆங்கில ஆசிரியராகவும்  இவற்றிற்கு மேலதிகமாக 16 வருட கால மொழிபெயர்ப்பாளர் அனுபவமும் அகில இலங்கை சமாதான நீதவானாக சுமார் 14 வருட காலம்  கொண்டவராவார்.றிஸ்லி முஸ்தபா கல்வி மேமம்பாட்டு அமைப்பின் செயலாளராகவும் செயற்பட்டு பல்வேறு சமூக சேவைகளை முன்னெடுத்து வருகின்றார்.

 மேலும் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) பழைய மாணவர் என்பதுடன்

மர்ஹூம் எம்.எம்.அப்துல் ஹமீத்  ஏ.ஆர்.உம்மு சுறையா தம்பதிகளின் நான்காவது புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.