ஜேர்மனியில் கடுமையான பனிப்பொழிவு: இருவர் பலி!

ஆசிரியர் - Admin
ஜேர்மனியில் கடுமையான பனிப்பொழிவு: இருவர் பலி!

ஜேர்மன் வானிலை ஆராய்ச்சி மையம், கடுமையான பனிப்பொழிவு காரணமாக மக்கள் வெளியே செல்லவேண்டாம் என்றும், வீடுகளுக்குள் இருக்குமாறும், உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்றும் நேற்று எச்சரித்திருந்தது. இந்நிலையில், கடுமையான பனிப்பொழிவு காரணமாக நாடு முழுவதும் பல மாநிலங்களில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது, கார் விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.     

மேலும், மரங்கள் விழும் அபாயம் காரணமாக உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று Rheingau-Taunus மாகாணம் வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. வடக்கு ஜேர்மனியைப் பொருத்தவரை பாதிப்பு குறைவாகவே உள்ளது என்றாலும், ஏராளமான விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

சாலை போக்குவரத்து மட்டுமின்றி விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பிராங்பர்ட் விமான நிலையத்தில் மட்டும், திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் கிட்டத்தட்ட 300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், குளிராலும் கூடுதல் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எரிவாயு சேமிப்பு காரணமாக நாட்டின் எரிசக்தி விநியோக நிலைமை கடந்த ஆண்டை விட குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாக இருந்தாலும், அபாயம் தொடர்ந்து நீடிப்பதாக பெடரல் நெட்வொர்க் ஏஜென்சி (BNetzA) தெரிவித்துள்ளது.

பெடரல் நெட்வொர்க் ஏஜன்சியின் தலைவரான தலைவர் Klaus Mueller கூறுகையில், அதிக குளிரான குளிர்காலம் காரணமாக எரிவாயு பயன்பாடு கடுமையாக அதிகரிக்கும் நிலை ஏற்படலாம் என்று கூறியுள்ளதுடன், அதனால், இப்போதே எரிவாயு தேவை குறித்து முடிவு செய்யமுடியாது என்றும், அதனால் மக்கள் எப்படியெல்லாம் எரிவாயுவை சேமிக்கமுடியும் என்பதைக் குறித்து கவனமாக சிந்தித்து செயல்படுமாறும் கேட்டுகொண்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு