நஞ்சூட்டப்பட்ட உக்ரைன் புலனாய்வு பிரிவின் தலைவரின் மனைவி: ரஷ்யா காரணமா?
உக்ரைனின் புலனாய்வு பிரிவின் தலைவரின் மனைவி நஞ்சூட்ட்பட்டுள்ளார் என உக்ரைனின் இராணுவ புலனாய்வுபிரிவு தெரிவித்துள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான இரகசிய நடவடிக்கைகளை முன்னெடுத்ததன் காரணமாக உக்ரைனில் மக்கள் அபிமானத்தை பெற்றவராக புலனாய்வு பிரிவின் தலைவர் காணப்படுகின்றார்.
ரஷ்யாவின் புலனாய்வு பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட பத்திற்கும் மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சிகளில் இருந்து உக்ரைனின் புலனாய்வு பிரிவின் தலைவர் உயிர் தப்பியுள்ளார்.
இந்நிலையில் புலனாய்வு பிரிவின் தலைவர் கைரைலோ புடனோவின் மரியானா புடனோவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் எப்போது நஞ்சூட்டப்பட்டார் யார் அதற்கு காரணம் என்ற விபரங்களை உக்ரைன் வெளியிடவில்லை.
அதேவேளை உக்ரைன் புலனாய்வு பிரிவின் ஏனைய சிலரும் சிறிய நஞ்சூட்டல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என பிபிசியின் உக்ரைன் சேவை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் ரஷ்யா இது குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை எனினும் இது உள்மோதல் காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என ரஷ்ய ஊடகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.