முதலாவது கேபிள் கார் திட்டம் இலங்கையில் அறிமுகம்

ஆசிரியர் - Admin
முதலாவது கேபிள் கார் திட்டம் இலங்கையில் அறிமுகம்

மத்திய மலைநாட்டில் முதலாவது கேபிள் கார் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.

இலங்கையின் முதலாவது பல மத சங்கம இடமாக விளங்கும் அம்புலுவாவவில் முதலாவது கேபிள் கார் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

சீனாவின் சர்வதேச கட்டட இயந்திர கூட்டுத் தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி இந்த கேபிள் கார் திட்டம் நிர்மாணிக்கப்பட்ட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டில் அமைந்துள்ள பல்லுயிர் பெருக்க வளாகத்திலும் இது கொண்டுவரப்பட உள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.

இத்திட்டத்திற்காக சுமார் 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

சீன மெஷின் பில்டிங் இன்டர்நேஷனல்(China Machine-Building International) நிறுவனத்தால் இந்த திட்டம் முன்னெடுக்கப்படும்.

இதற்கான ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகியுள்ளது. அம்புலுவா பிரதேசத்தில் சுற்றுலா அனுபவத்தை இது மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதுமையான முயற்சியின் நிறைவுக்காக உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு