SuperTopAds

17 நாட்கள் சுரங்கத்திற்குள் இருந்த அனுபவம்: மீட்கப்பட்ட தொழிலாளர் பகிர்ந்த தகவல்!

ஆசிரியர் - Admin
17 நாட்கள் சுரங்கத்திற்குள் இருந்த அனுபவம்: மீட்கப்பட்ட தொழிலாளர் பகிர்ந்த தகவல்!

உத்தரகாண்ட் மாநிலம், உத்தர்காஷி என்ற இடத்தில் சுரங்கத்தில் சிக்கி மீட்கப்பட்ட தொழிலாளர் ஒருவர் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம், உத்தர்காஷி என்ற இடத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் 41 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். அங்கு, திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் சுரங்கத்தின் ஒரு பகுதி அப்படியே மூடியது. இதனால், அங்கு வேலை செய்து கொண்டிருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கினர்.     

இவர்களை மீட்கும் பணி கடந்த 17 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். பின்னர், பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தொழிலாளர் பகிர்ந்தது..

இந்நிலையில், மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களில் சுபோத் குமார் வர்மா என்ற இளைஞர் கூறுகையில், "நாங்கள் சுரங்கத்தில் சிக்கிய முதல் 24 மணிநேரம் மிகக் கடுமையாக இருந்தது. பின்னர், எங்களுக்கு குழாய் மூலம் உணவு வழங்கப்பட்டது.

தற்போது, நான் நலமாகவும் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன். 41 தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்ட இந்திய அரசுக்கும், உத்தரகாண்ட் அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

இதனிடையே, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுடன் டெலிபோன் மூலம் உரையாடினார்.