SuperTopAds

'நீல சபையர் விழா' பிரகடனமும் ஊடகவியலாளர் சந்திப்பும்

ஆசிரியர் - Editor III
'நீல சபையர் விழா' பிரகடனமும் ஊடகவியலாளர் சந்திப்பும்

நீல சபையர் விழா' பிரகடனமும் ஊடகவியலாளர் சந்திப்பும்!

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) அதன் 65வது  ஆண்டு நிறைவு கொண்டாடும் இந்த தருணத்தில் 65 வது ஆண்டுக்கான 'நீல சபையர் விழாவிற்கு சகலரும் ஒத்துழைப்புகளை வழங்குமாறு பழைய மாணவர் சங்க செயலாளர் சுகைல் ஜமால்தீன் தெரிவித்துள்ளார்.

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) அதன் 65வது  ஆண்டு நிறைவு கொண்டாடும் இந்த தருணத்தில் 65 வது ஆண்டுக்கான 'நீல சபையர் விழா' பிரகடனமும் ஊடகவியலாளர் சந்திப்பும் மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரி மருதூர்கனி மண்டபத்தில் இன்று ( 18.11.2023)  இரவு  பாடசாலையின் அதிபர் எம். எம். ஹிர்பகான் தலைமையில் நடைபெற்ற போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த செய்தியாளர் சந்திப்பில்  பாடசாலையின் பிரதி அதிபர் எம்.பி. எம். றாஜி, முன்னாள் அதிபர் ஏ.எல்.ஏ.சக்காப், பழைய மாணவர் சங்க பிரதித் தலைவர் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.உமர் அலி, பாடசாலை அபிவிருத்திக் குழு செயலாளர் பி.எம். அறபாத், பழைய மாணவர் சங்க செயலாளர்  சுகைல் ஜமால்தீன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

மருதமுனை பிரதேசத்தில் பல்லாயிரக் கணக்கானோருக்கு கல்வியூட்டிய மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) அதன் 65வது    வருடத்தைப் பூர்த்தி செய்து   கொண்டாடுகிறது.அம்பாறை மாவட்டத்தின் பல பாகங்கள் மற்றும் நாட்டின் ஏனைய மாவட்டங்களையும் சேர்ந்த மாணவர்கள் வந்து கல்வி கற்றுள்ளார்கள். அதேவேளை, கல்லூரி 65வது ஆண்டு பிரமாண்ட   விழா நிகழ்வுகளின் போது பாடசாலையின் கல்வி கற்றல், கற்பித்தல் நடவடிக்கையில் எவ்வித  பாதிபினையும் ஏற்படுத்தாத வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பவள விழாவை பாடசாலையின் உட்கட்டமைப்பு மற்றும் கல்வி மேன்பாட்டுக்கு எவ்வாறு பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்ற விடயங்களை ஊடகவியலாளர்களுக்கு எடுத்துக்கூறினார்.எனவே  மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் கற்றவர்களும் நலன்விரும்பிகளும் எமது  பாடசாலையின்  முன்னேற்றத்துக்கு கைகோர்க்க வேண்டுமென்றும் இங்கு உரையாற்றியவர்கள்  கேட்டுக்கொண்டனர்.

மேலும் இதனையொட்டி பாடசாலை சமூகத்தினரால் வருடம் முழுவதும் பிரமாண்டமான பல்துறை நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில்  பவள விழாவை முன்னிட்டு உத்திகபூர்வ இலட்சினை அறிமுக விழா  அதிபர் எம். எம். ஹிர்பகான் தலைமையில் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அத்துடன் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் 65 வருட பூர்த்தியை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இரவு பகலாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.