இந்திய பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!! -இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கையா?

ஆசிரியர் - Editor II
இந்திய பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!! -இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கையா?

இந்திய பெருங்கடலில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12:31 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 என்ற அளவில் பதிவாகியுள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து 1,326 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய பெருங்கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் பயங்கரமான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

1,326 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தாலும் இந்த நிலநடுக்கம் இலங்கையில் உணரப்பட்டுள்ளது.

இந்திய பெருங்கடலில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பினும் எந்த நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை.

அதே சமயம் இலங்கையில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு