தனியன் யானை ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டதை அடுத்து காட்டிற்கு துரத்தி அடிக்கும் முயற்சி

ஆசிரியர் - Editor III
தனியன் யானை ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டதை அடுத்து காட்டிற்கு துரத்தி அடிக்கும் முயற்சி

அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மறுசுழற்சி நிலையத்திற்கு அருகாமையில் தனியன் யானை ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டதை அடுத்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த யானையை  மீண்டும் காட்டிற்கு துரத்தி அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இன்று குறித்த கழிவு கொட்டும் இடத்திற்கு வந்த தனியன் யானை வீதிகளில் செல்வோரை அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தது.

இதனை அடுத்து அப்பகுதிக்கு தகவல் அறிந்து செயற்பட்ட அதிகாரிகள் யானையை அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்கான நடவடிக்கையில் துரிதமாக ஈடுபட்டிருந்தனர். 

அண்மைக்காலங்களில்  யானை – மனித மோதலால்   யானைகளும் மனித உயிர்களும் இழக்கின்ற சந்தர்ப்பங்கள் சடுதியாக அதிகரித்துள்ளன.  அத்துடன்  யானை – மனித மோதலால் அதிகளவான மனித உயிரிழப்புக்கள் இடம்பெறும் நாடுகளில்  இரண்டாவதாக இலங்கை காணப்படுகிறது.

யானை – மனித மோதலை குறைப்பதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதும் அவற்றை  முறையாக அமுல்படுத்தப்படாமை மற்றும் மேற்பார்வை செய்யப்படாமை காரணமாக   யானை – மனித மோதலின் இழப்புக்களை குறைப்பது இன்று வரையும் முடியால் உள்ளமை வெளிப்படையாகும்.

இதனால் குறித்த மோதலினால்  யானைகளும் மனிதர்களும் தொடர்ச்சியாக மரணித்து வருகின்றனர். எனவே மனிதன் மற்றும் யானைகளை காப்பாற்றவும் சொத்துக்களை பாதுகாக்கவும் உடனடியாக தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்

இவ்வாறு தொடர்ச்சியாக யானை மற்றும் மனித மரணங்கள் நிகழ்ந்து வந்தாலும் அவற்றினை நிவர்த்திப்பதற்கு அல்லது குறைப்பதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு