SuperTopAds

7 தலைமுறையாக தீபாவளி கொண்டாடமல் இருக்கும் கிராமம்!! -அதிர்ச்சி தகவல் வெளியானது-

ஆசிரியர் - Editor II
7 தலைமுறையாக தீபாவளி கொண்டாடமல் இருக்கும் கிராமம்!! -அதிர்ச்சி தகவல் வெளியானது-

தீபாவளி பண்டிகையை சுமார் ஏழு தலைமுறைகளாக கொண்டாடமல் இருக்கும் கிராமம் குறித்த தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் உள்ள ரனஸ்தலம் அருகே புன்னானா பாலம் என்ற கிராமத்திலேயே இந்த சம்பவம் 7 தலைமுறைகளாக நடந்துக் கொண்டுள்ளது.

இக்கிராமத்தில் 2000 இற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு 95 சதவீதத்திற்கும் அதிகமாக புன்னானா என்ற தலைமுறையினரே உள்ளார்கள்.

பல வருடங்களுக்கு முன்பு இருந்தே இக்கிராமத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடிக் கொண்டே தான் இருந்தார். ஆனால் ஒரு வருடத்தில் நிகழந்த தீபாவளி கொண்டாட்டத்தின் போது துரதிர்ஷ்டவசமாக பல சம்பவங்கள் நிகழந்துள்ளன. 

இதன் காரணமாகவே இந்த கிராமத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடமல் இருகின்றனர்.

தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த புன்னானா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆண் குழந்தையை பாம்பு கடித்து இறந்தது.  

அதையடுத்து, பண்டிகை முடிந்த 3 ஆவது நாளில் 2 காளைகள் இறந்தன. இந்த இரு சம்பவங்கள் இரண்டும் அந்த கிராமத்தையே அதிர்ச்சியில் உலுக்கியது.

இதனாலேயே அக்கிராமத்தில் இருப்பவர்கள் தீபாவளிக் கொண்டாடினால் துரதிர்ஷ்டம் என நம்ப ஆரம்பித்தனர். இதனால் வருடம்தோறும் அவர்கள் தீபாவளி திருநாளை கொண்டாடுவதில்லை.

தலைமுறை தலைமுறையாக எப்போதும் தீபாவளிக் கொண்டாட வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர். ஆகவே படித்த இளைஞர்களும் இதை கொண்டாட வேண்டும் என்று முன்வரவில்லை.

தலை தீபாவளி கொண்டாடுபவர்கள் வெளியூர்களில் பெண் எடுத்திருந்தால் அவர்கள் மாமனார் வீட்டுக்கு சென்று தீபாவளியை கொண்டாடலாம்.

ஆனால் உள்ளூரில் பெண் எடுத்தவர்கள் தலை தீபாவளி கொண்டாட முடியாத நிலையில் இருகின்றனர்.

மேலும் கிட்டத்தட்ட 7 தலைமுறைகளாக இந்த கிராமத்தில் மூடநம்பிக்கை காரணமாக தீபாவளி பண்டிகை கொண்டாடாமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.