கடை மீது விழுந்த மரம்! ஒருவர் பலி, இருவர் படுகாயம்...

ஆசிரியர் - Editor I
கடை மீது விழுந்த மரம்! ஒருவர் பலி, இருவர் படுகாயம்...

சீரற்ற காலநிலை காரணமாக கண்டி, பலகொல்ல, வாரப்பிட்டிய பகுதியில் உள்ள மரக்கறிக் கடை ஒன்றின் மீது பருத்தி மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை (2) மாலை இடம்பெற்றுள்ளது.

இதேவேளை இந்த சம்பவத்தின் போது கடையின் உரிமையாளரும் ஊழியர் ஒருவரும் காயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிக எடையுடன் காணப்பட்ட மரம் முழுமையாக வேரோடு சாய்ந்து மரக்கறிக் கடையின் மீது விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு