SuperTopAds

பாலை பலமுறை காய்ச்சலாமா?

ஆசிரியர் - Editor II
பாலை பலமுறை காய்ச்சலாமா?

காலையில் எழுந்ததும் ஒரு கப் பாலோ, கோப்பியோ குடித்தால்தான்… சுறுசுறுப்பு நாடி நரம்பெல்லாம் பரவும் என்ற மனப்பழக்கத்துக்கு ஆளாகி இருப்பவர்கள் நாம். குழந்தைகளுக்கும், முதியவர்களுக்குமான முக்கியமான ஊட்டச்சத்தும் பால்தான். அப்படி நமக்கு மிக முக்கிய மாகிப் போன பாலை, நாம் சரியான முறையில் காய்ச்சுகிறோமா..?

அப்பா பால்தேநீர் குடிக்கும்போது ஒருமுறை, குழந்தைக்குப் பாலூட்ட ஒருமுறை என பாலை பலமுறை சுடவைக்கும்போது, இது சரிதானா என்று யோசித்துப் பார்த்தது உண்டா..?

”பாலை பலமுறை சுட வைப்பது மிகத் தவறான பழக்கம்!. காய்ச்சிய பாலை 23 நிமிடங்களுக்கு மேல் நீண்ட நேரம் சுட வைக்கும்போது, அதில் இருக்கும் விட்டமின் பி கொம்ப்ளக்ஸ் சத்துகளான பி1, பி2, பி12 ஆகியவை ஆவியாகிவிடும்.

கல்சியம், விட்டமின் சத்துகளுக்காகத்தான் பால் குடிக்கிறோம். ஆனால், பாலை அடிக்கடி சுடவைப்பதால் அந்த சத்துகள் வீணாகிவிடும் என்றால், பால் குடிப்பதன் காரணமும் வீணாகிவிடும்தானே?.

பசும்பாலில் இருக்கும் தீங்கு தரும் பக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகள், அதைக் காய்ச்சும்போது அழிந்துவிடும். அதனால்தான் பாலைக் காய்ச்சுகிறோம். இன்று பெரும்பாலானவர்கள் பக்கெட் பால் வாங்குகிறோம்.

அது ஏற்கனவே சுத்தம் செய்யப்பட்ட பிறகுதான் பக்கெட்டுகளில் அடைக்கப்படுகிறது என்பதால், அதனை நீண்ட நேரம் காய்ச்ச வேண்டும் என்கிற அவசியமில்லை. பாலைக் காய்ச்சியதும் குடித்துவிடலாம். ஆறவிட்டு, மீண்டும் சூடாக்கி சூடாக்கி சத்துகளை அழித்த பாலைக் குடிப்பதைத் தவிர்க்கலாம் .

பசும்பால் வாங்குபவர்களுக்கு…

பால் பொங்கியதும் உடனே இறக்கிவிடாமல், 810 நிமிடங்கள் காய்ச்ச வேண்டும். கரண்டியால் பாலைக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் பால் 100 டிகிரி செல்சியஸ் வரை சூடாகி, தீங்கு தரும் பக்டீரியாக்கள் அழியும்.

பக்கெட் பால் வாங்குபவர்களுக்கு…

பதப்படுத்தப்பட்ட பக்கெட் பாலில் ஏற்கனவே பக்டீரியாக்கள் அழிக்கப்பட்டிருப்பதால், அதை 68 நிமிடங்கள் சூடு செய்தால் போதும்.

யு.எச்.டி. வகை பால் வாங்குபவர்களுக்கு…

இந்த வகைப் பால் வாங்குபவர்கள், அதைக் கொதிக்க வைக்க வேண்டிய அவசியமில்லை. சுட வைத்தாலே போதுமானது.

எந்த வகைப் பால் ஆயினும், அதை இரண்டு முறைக்கு மேல் சுட வைக்க வேண்டாம்.