கல்முனைப் பிரதேச செயலகப் பிரிவின் சமுர்த்தி வங்கியில் வறுமை ஒழிப்பு திட்டங்கள் முன்னெடுப்பு
கல்முனைப் பிரதேச செயலகப் பிரிவின் கீழ்வரும் மருதமுனை மற்றும் கல்முனைக்குடி சமுர்த்தி வங்கியில் வறுமை ஒழிப்பு வாரத்துக்கான இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று தலைமைப்பீட சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.ஆர்.எம் .சாலிஹ் தலைமையில் வீடுகள் கையளிப்பு அடிக்கல் நாட்டும் நிகழ்வு மரம் நடுகை நிகழ்வுகள் மற்றும் வாழ்வாதாரக் கடன் வழங்கி வைக்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.
இதன் போது பிரதேச செயலாளர் ஜெ.லியாக்கத் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்ததுடன் விசேட அதிதியாக பிரதேச செயலக கணக்காளர் கே.எம்.எஸ். அமீர் அலி கௌரவ அதிதிகளாக மகா சங்க முகாமைத்துவப் பணிப்பாளர் என்.எம் நௌசாத் வங்கி முகாமையாளர்களான எஸ்.எஸ். பரீரா யு.கே.சிறாஜ் மற்றும் திட்ட முகாமையாளர் ஏ.எம்.எஸ்.நயீமா மற்றும் சமுர்த்தி வலய உதவி முகாமையாளர்களான ஐ.எல். அர்சுத்தீன் பி.எம். இசாக் வங்கி உதவி முகாமையாளர் எஸ்.எஸ். றிபாயா மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் சமுர்த்தி சமுதாய அமைப்பின் தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.