மாணவிகள் படுகொலைகளை தடுத்து நிறுத்துவதற்கு அரசியல் தலமைகள் ஒன்றுபடவேண்டும்..

ஆசிரியர் - Editor I
மாணவிகள் படுகொலைகளை தடுத்து நிறுத்துவதற்கு அரசியல் தலமைகள் ஒன்றுபடவேண்டும்..

புங்குடுதீவில் வித்தியா சுழிபுரத்தில் றெஜினா போன்ற பெண் குழந்தைகளின் காட்டுமிராண்டித்தனமான கொலைகள் இனியும் நடைபெறாது தடுப்பதற்கு அரசியல் தலைமைகள், பொது அமைப்புகள், 

மதத் தலைவர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என சமூக அக்கறை கொண்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுப்பதாக ஆளுநர் றெஜினோல்குரே தெரிவித்தார்.

இது குறித்து ஆளுநர் மேலும் கூறுகையில், 

வீண் உணர்ச்சி பேச்சுக்கள், கிளர்ச்சிகளினால் இவ்வாறான செயல்களை தடுத்து நிறுத்தி விடமுடியாது. இவை ஏன் நடைபெறுகின்றன என்பதன் பின்னணிகளை நன்கு விசாரித்து அறிந்து கொள்வது அவசியமானது. 

 முழு நாட்டினையும் சோகத்தில் ஆற்றிய சம்பவம் றெஜினாவின் படுகொலை என நான் நினைக்கின்றேன். பெரியவர்களின் சண்டையில் பழியை தீர்த்துக் கொள்வதற்காக ஒன்றும் அறியாத சின்னக்குழந்தை படுகொலை செய்யப்பட்டிருக்கின்றது. 

இது மிகவும் கொடூரமான சம்பவம். இதற்கு எதிராக நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு