குடிசன வீட்டு வசதிகள் தொகைமதிப்பு கணக்கெடுப்புக்கான தேசிய மட்டப் பூர்வாங்கப் பணி ஆரம்பம்
குடிசன வீட்டு வசதிகள் தொகைமதிப்பு கணக்கெடுப்புக்கான தேசிய மட்டப் பூர்வாங்கப் பணி ஆரம்பம்
இலங்கையின் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு-2024 கணக்கெடுப்புக்கான முன்னரான நிரற்படுத்தும் பணியின் தேசிய மட்ட பயிற்சி செயற்பாடுகள் கல்முனை பிரதேச செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த செயற்பாடுகளை உடனடியாக துரிதப்படுத்தும் நோக்குடன் கடந்த 3 தினங்களாக பல்வேறு துறைகளில் உள்ள உத்தியோகத்தர்கள் உள்வாங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.2012 ஆம் ஆண்டு இறுதியாக குடிசன கணக்கெடுப்பு நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட நிலையில் 12 வருடங்களின் பின் 2024 ஆம் ஆண்டு இந்தக் கணக்கெடுப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இம்முறை வழமையாக படிவங்களை பயன்படுத்தி கணக்கெடுப்பு நடத்தப்படமாட்டாது எனவும் அதற்கு பதிலாக டப்லட் கனணிகளின் மூலம் கெப்பி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடைபெறவுள்ளது என்றும் இதற்கு பொதுமக்கள் தங்களது பூரண பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் புள்ளிவிபரத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பி.எம்.பி அநுர குமார தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் இதற்கு முன்னோடியாக கல்முனை பிரதேச செயலக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்கள உத்தியோகத்தர் எஸ்.எல் சுப்ஹானின் வழிநடாத்தலின் கீழ் பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் உயர் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் பயிற்சி செயலமர்வுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.