மலிங்கா, முரளிதரனின் உலகக் கிண்ண சாதனையை தகர்த்த ஸ்டார்க்

ஆசிரியர் - Editor II
மலிங்கா, முரளிதரனின் உலகக் கிண்ண சாதனையை தகர்த்த ஸ்டார்க்

 உலகக் கிண்ண தொடரில் குறைந்த போட்டிகளில் 50 இலக்குகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் படைத்துள்ளார்.

சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியா 6 இலக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

இப் போட்டியில் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 31 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து ஒரு இலக்குகளை வீழ்த்தினார்.

இதன்மூலம் அவர் இலங்கையின் லசித் மலிங்காவின் சாதனையை முறியடித்துள்ளார். அதாவது, உலகக் கிண்ண தொடரில் குறைந்த இன்னிங்ஸ்களில் 50 இலக்குகளை வீழ்த்திய வீரர் ஸ்டார்க் ஆவார். 

மலிங்கா 25 போட்டிகளிலும், மெக்ராத் (அவுஸ்திரேலியா) மற்றும் முரளிதரன் (இலங்கை) ஆகியோர் 30 போட்டிகளில்  இந்த சாதனையை படைத்திருந்தனர்.

முன்னதாக, டேவிட் வார்னர் அதிவேகமாக உலகக் கிண்ண தொடரில் 1000 ஓட்டங்கள் எடுத்து துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு