SuperTopAds

காங்கேசன்துறை - நாகபட்டினம் கப்பல்சேவை 10ம் திகதி ஆரம்பம்! கட்டணம் உள்ளிட்ட விபரங்கள் வெளியானது...

ஆசிரியர் - Editor I
காங்கேசன்துறை - நாகபட்டினம் கப்பல்சேவை 10ம் திகதி ஆரம்பம்! கட்டணம் உள்ளிட்ட விபரங்கள் வெளியானது...

யாழ்.காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை 10ம் திகதி ஆரம்பமாகும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

"செரியாபாணி" என்ற பெயரைக்கொண்ட இந்த பயணிகள் கப்பலில் பயணிகளுக்கான அனுமதிச்சீட்டுக் கட்டணம் மற்றும் எவ்வளவு நிறை கொண்ட பொருட்களை எடுத்து செல்லலாம் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

நாகை - இலங்கைக்கு இடையே இயக்கப்பட உள்ள பயணிகள் கப்பல் கொச்சினில் தயாரிக்கப்பட்டதாகும்.

குளிரூட்டி வசதியுடன் கூடிய இந்த பயணிகள் கப்பல் நேற்று(07) நாகை துறைமுகம் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செரியாபாணி கப்பல் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் சோதனைகளை ஓட்டங்களை நடத்துகிறது. 

இந்த சோதனை ஓட்டத்தில் கப்பலில் பணியாற்றும் 14 ஊழியர்கள் மட்டுமே பயணம் செய்ய உள்ளனர்.

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகம் 60 கடல் மைல் கல்லில் உள்ளது. 

இதனால் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை சென்று வர 6 ஆயிரம் லிட்டர் எரிபொருள் தேவைப்படும் என கூறப்படுகிறது.

இந்தநிலையில் நாகை - இலங்கை இடையே பயணிக்க 18 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து 6500 இந்திய ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் பயணிகள் தங்களுடன் 40 கிலோ எடையுள்ள பொருட்களை கொண்ட செல்ல அனுமதிக்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கப்பல் சேவையின் மூலம் நாகப்பட்டினத்தில் இருந்து வெறும் 3 மணி நேரத்தில் இலங்கையை சென்றடைய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.