உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு அஸ்-ஸுஹறா வித்தியாலயத்திற்கு பல்வேறு உதவிகள்
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கமு/கமு/அஸ்-ஸுஹறா வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதியா தலைமையில் சிறுவர் தின நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.சி.என்.சபானா (வர்த்தக முகாமைத்துவம்), லயன்ஸ் கழகம் பிராந்தியப்பணிப்பாளர் மற்றும் பாடசாலையின் அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளருமான பொறியியலாளர் எம்.ரீ.எம்.அனாப் , கௌரவ அதிதிகளாக லயன்ஸ் கழக வலயப் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான எம் .பி.எம் .பௌசான் , சம்மாந்துறை லயன்ஸ் கழக தலைவர் ஏ.ஜே.எம்.றாபி உட்பட பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,பழைய மாணவர்கள் ,பெற்றோர்கள், நலன்விரும்பிகள், கலந்து சிறப்பித்தனர் .
மேலும் இந்நிகழ்வில் 725 மாணவர்களுக்கும் 80,000 ரூபாய் பெறுமதியான அன்பளிப்பு பொருட்கள் உட்பட பாடசாலைக்கு 21 ஆயிரம் பெறுமதியான 05 குப்பை தொட்டிகள் அதிதிகளால் பாடசாலைக்கு அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
தொடர்ந்தும் இந்நிகழ்வில் பாடசாலையின் ஒவ்வொரு மாணவர்களின் கையெழுத்து சஞ்சிகை(சகல மாணவர்களுக்கும் சிறந்ததோர் எழுத்தாக்கம்) வெளியீடும் English Unit ஒன்றும் பிரதம அதிதிகளினால் திறந்துவைக்கப் பட்டது.ஆசிரியர்கள் ,அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் பாலர் பாடசாலை மாணவர்கள் உட்பட ஏனைய மாணவ மாணவியர்களுக்கு அன்பளிப்புகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.