SuperTopAds

கழிவு நீரினால் ஏற்படுகின்ற பாரிய சுகாதார சீர்கேடு தொடர்பில் ஆராய்வு

ஆசிரியர் - Editor III
கழிவு நீரினால் ஏற்படுகின்ற பாரிய சுகாதார சீர்கேடு தொடர்பில் ஆராய்வு

 

வீட்டுத்திட்டத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீரினால்  ஏற்படுகின்ற பாரிய சுகாதார சீர்கேடு தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பெரியநீலாவணை இஸ்லாமிக் ரிலீப் வீட்டுத்திட்டத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீரினால் பாரிய சுகாதார சீர்கேட்டினால் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினை குறித்து ஆராயும் முகமாக செவ்வாய்க்கிழமை (3)  பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் விஜயம் செய்தார்.

இதன் போது  கடந்த சுனாமி அனர்த்தத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட 96 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இஸ்லாமிக் ரிலீப் வீட்டுத் திட்டத்தில் 18 வருங்களாக முறையான வடிகான் இன்மையால் சமையலறைக் கழிவுநீர்  குளியலறைக் கழிவுநீர் மற்றும் மலசலகூட கழிவுகள் போன்றவை வீட்டுத்திட்டத்தின் பின்புறங்களில் தேங்கிநின்று பாரிய அளவிலான நுளம்புகளைப் பெருக்கி   நோய்களை ஏற்படுவதை நிரந்திரமாக தடுத்து ஒரு பொறிமுறையை உருவாக்குவது தொடர்பாக ஆராயப்பட்டது.

குறித்த களவிஜயத்தின் போது அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்  சிந்தக அபேவிக்ரம அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜய பத்ம  கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி  மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திரு.எச்.பி.அனிஸ் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பிரசன்னமாக இருந்தனர்.