யாழ்.மாநகரசபை கட்டிடத்தை கட்டுவதற்கு உடன் நடவடிக்கை எடுங்கள். பிரதமர் ரணில் உத்தரவு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபை கட்டிடத்தை கட்டுவதற்கு உடன் நடவடிக்கை எடுங்கள். பிரதமர் ரணில் உத்தரவு..

யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய கட்டிடத்தினை உடனடியாக ஆரம்பியுங்கள் அதற்குத் தேவையான மேலதிக நிதி அடுத்து வரும் வரவு செலவுத்  திட்டங்களின் ஊடாக ஒதுக்கீடு செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மாநகர முதல்வர் இ.ஆனோல்ட்டிற்கு உத்தரவாதம் வழங்கியுள் ளார்.

பிரதரின் அலரிமாளிகையில் நேற்றைய தினம் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போது மாநகர முதல்வர் மாநகரத்திற்குத் தேவையான பல திட்டங்கள் தொடர்பில் கோரிக்கை விடுத்தார். 

இவற்றில் பல திட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன்போதே மேற்படி விடயமும் பிரதமரால் உத்தரவாதமளிக்கப்பட்டது.

குறித்த சந்திப்பின்பில் பாசையூர்ப் பகுதியில்மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையினர் விடுதி அமைக்கும் நிலத்தினை திட்டத்திற்கு வழங்க வேண்டும். 

அதேபோன்று யாழ்ப்பாணம் வைத்தியசாலை முன்பாக போதிய வாகனத்தரிப்பிடம்இல்லாத நிலையில் விடுதலைப் புலிகள் பாவித்தனர் என்ற பெயரில் பொலிசாரின் பிடியில் உள்ள நிலத்தை வாகனத் தரிப்பிடம் அமைக்க மெற்றுத்தர வேண்டும். 

அதேபோல் கொழும்புத்துறை முதல் நாவாந்துறை வரையில் ஆழ் கடல்பகுதி தவிர்ந்த ஏனைய பகுமிகளில் கடல் பகுதிக்குள் கல் பரப்பி நிலத்தை விஸ்தரிப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்து வழங்குவதோடு 

யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் வைத்தியசாலை ஆரம்பிக்கும் இடத்தில் இருந்து காக்கைதீவு  வரையில் வீதி அகலிப்பு , பாதாள ஏற்பாடு ,கழிவகற்றலுக்கான விசேட நிதி ஒதுக்கீடு என்பனவற்றிற்கான திட்ட முன்னெடுப்பு. 

போன்றவற்றுடன் செம்மணிப் பகுதியில் 293 ஏக்கரில் புதிய நகர அபிவிருத்தி திட்டத்திற்கான இடமாக அப்பிரதேசத்தை உடன்பிரகடனப் படுத்த வேண்டும் எனவும் முதல்வரால் விடுத்த போரிக்கைகள் பிரதமரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதேபோன்று மாநகர சபையின் கீழ் அதிக வீதிகள் நீண்டகாலம் சீரமைக்கப்படாதமையினால் அவற்றினை சீரமைக்க சபையில் போதிய நிதி இன்மை காரணமாக விசேட நிதி அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு